|
இலங்கையர் ஜனநாயக முன்னணியின் சேவையை ஜேர்மன் பத்திரிகை பாராட்டுகின்றது.
[வெள்ளிக்கிழமை, 03-07-2009, 01:30 GMT]
வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிவாரணங்களுக்காக இலங்கையர் ஜனநாயக முன்னணியினர் ஜேர்மன் நாட்டில் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜேர்மன் நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள் பலவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கைகளுக்கு தமிழ் அமைப்புக்களின் முன்னைநாள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலதரப்பட்டோரும் உதவிகளை புரிந்து வருவதாக தெரியவருகின்றது.
சேகரிக்கப்பட்ட பொருட்களை Bietiheim- Bissingen எனுமிடத்தில் வைத்து கொள்கலன்களில் ஏற்றி நாட்டிற்கு அனுப்பும் நிகழ்வுகளை நேடியாக சென்று பார்வையிட்ட ludwigsburger-kreiszeitung எனும் ஜேர்மன் முன்னணி பத்திரிகை "இலங்கை மக்களுக்கு கொள்கலன் நிரம்பிய உதவி" எனும்
»மேலும்» |
| |
|
பொய்யான தகவல்களை கூறி சட்டவிரோத செயற்பாடுகள் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அறிவியுங்கள்
[வெள்ளிக்கிழமை, 03-07-2009, 01:30 GMT]
பொய்யான தகவல்களை கூறி சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவர்கள் தொடர்பாக விபரங்கள் தெரியும் பட்சத்தில் உடனடியாக பொலிஸ் தலைமையக த்திற்கு அறியத்தருமாறு பொலிஸ் திணைக்களம் வேண்டுகோள் விடுக்கின்றது. அமைச்சர்களின் உறவினர்கள் என்று பொய்யான தகவல்களை கூறிக்கொண்டு சட்டவிரோத மண் அகழ்வு, மரம் வெட்டுதல், மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இவ்வாறு சட்டவிரோதமாக நடந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் கட்டுப்படுத்துமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கமைய பொலிஸ் தலைமையகம்
»மேலும்» |
| |
|
ஐரோப்பிய புலிகளின் பிளவு உறுதிப்படுத்தப்படுகின்றது.
[வெள்ளிக்கிழமை, 03-07-2009, 01:30 GMT]
இலங்கையில் புலிகளியக்கம் பூண்டோடு அழிக்கப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச நாடுகளில் உள்ள புலிகள் சொத்துக்களை மடக்கிக்கொள்வதற்காக குழுக்கள் குழுக்களாக பிரிந்து நிற்கின்றனர் என்ற செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலைமைகள் இன்று தீவிரமடைந்து வருகின்றது. பிரித்தானியாவில் இன்று கூடிய புலிகளின் ஒரு தரப்பினர் தாம் அமைக்க இருக்கும் நாடுகடந்த தமிழீழம் பற்றி ஆராய வருமாறு பலருக்கும் அழைப்பு விடுத்திருந்தாகவும், அவ்விடயத்தை அறிந்த றெஜி தரப்பினர், தலைவரைக் காட்டிக்கொடுத்த துரோக கும்பலை சேர்ந்தவர்களே இங்கு கூடுவவதாகவும் அவ்வொன்று கூடலுக்கு செல்வோரும் துரோகிகள் என அறிவித்துள்ளதாகவும் தெரியவருன்றது.
அதே நேரம் நேற்று நோர்வேயில் கேபி குழுவினரின் ஒன்று கூடல் இடம்பெற்றுள்ளது. அங்கு புதிய நிர்வாகம் ஒன்று தெரிவு செய்யப்பட்டு நோர்வே நாட்டுக்கான விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அங்கு சென்ற மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன், பழைய நிர்வாகத்தினரான முகிலன் குழுவினருடன் மக்கள் எவ்வித தொடர்புகளையும் பேண வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக
»மேலும்» |
| |
|
ஈரானில் கைதான ஏழு இலங்கையருக்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல்
[வெள்ளிக்கிழமை, 03-07-2009, 01:30 GMT]
ஈரானில் வைத்துக் கைதான ஏழு இலங்கைப் பிரஜைகளையும் விடுதலை செய்வதற்கு பல்வேறு வழிகளிலும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. இவர்களுக்கு எதிராக இரு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் ஒரு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதோடு அடுத்த வழக்கு இந்த வாரம் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
ஈரான் நாட்டு கடல் எல்லைக்கு சட்ட விரோதமாக நுழைந்த டுபாய் நாட்டுக் கப்பல் கடந்த வாரம் ஈரான் படையினரால் கைப்பற்றப்பட்டது. கப்பல் சிப்பந்திகளுக்கு எதிராக சட்ட விரோதமாக எரிபொருள் போக்குவரத்து செய்தது மற்றும் சட்டவிரோதமாக ஈரான் கடல் எல்லைக்குள் நுழைந்தது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடல் எல்லைக்கு சட்ட விரோதமாக நுழைந்தது குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு 50 ரூபா வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது குற்றச்சாட்டு தொடர்பாக இந்த வாரம் விசாரிக்கப்பட உள்ளது. இவர்களை
»மேலும்» |
| |
|
முகாம்களில் 2000 பேரிடம் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லை: அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ்
[வியாழக்கிழமை, 02-07-2009, 21:00 GMT]
இடம் பெயர்ந்து வவுனியா கதிர்காமர் கிராமத்தில் தங்கியிருக்கும் 20,000 பொதுமக்களில் 2000 பேர் பிறப்புச் சான்றிதழ் இல்லாமலும், 800 பேர் தேசிய அடையாள அட்டை இல்லாமலும் உள்ளனர். தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்பட்டிருப்பதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
»மேலும்» |
| |
|
எரிபொருட்களின் விலை அதிகரிப்பால் அரசாங்கம் மக்களை அசௌகரியத்துக்கு உட்படுத்தியுள்ளது: ஐ.தே.க
[வியாழக்கிழமை, 02-07-2009, 21:00 GMT]
எரிபொருட்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று ஐக்கிய தேசிய கட்சி இன்று வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
»மேலும்» |
| |
|
தமிழகத்தின் உயர் மட்ட குழு இலங்கை வர ஏற்பாடு
[வியாழக்கிழமை, 02-07-2009, 21:00 GMT]
தமிழக தூதுக்குழு வொன்று கூடியவிரைவில் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் இதற்கான உறுதிமொழியை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தன்னிடம் கூறியதாக இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும், இ. தொ. கா.வின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.
»மேலும்» |
| |
|
வடபகுதி மக்களுக்கு இனிப்பான செய்தி
[புதன்கிழமை, 01-07-2009, 20:30 GMT]
காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை என்பன வடக்கின் பிரதான தொழில் மையங்களாக விளங்கின. இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் வடபகுதி மக்களின் அரசியல் தலைமையாக அங்கீகாரம் பெற்ற தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உட்பட ஒரு பிரிவினர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் சங்கமமாகியதன் விளைவாக வடபகுதி பெற்ற நன்மை என்று இம் மூன்று தொழிற்சாலைகளையும் குறிப்பிடலாம்.
»மேலும்» |
| |
|
மடு தேவாலயத்தில் திருவிழா நடத்த இராணுவத்தினர் அனுமதி
[புதன்கிழமை, 01-07-2009, 20:30 GMT]
புனித மருதமடு திருத்தலத்தின் வருடாந்த திருவிழா உற்சவங்களை நடத்த இராணுவம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கோலகலமாக புனித மருத மடு தேவாலய திருவிழா நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
»மேலும்» |
| |
|
இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவ்
[புதன்கிழமை, 01-07-2009, 20:30 GMT]
இலங்கையின் முன்னாள் இந்தியத் தூதுவர் நிரூபமா ராவ் இந்திய மத்திய வெளியுறவுத்துறை புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் எஸ். சிவ்சங்கர் மேனன் ஜூலை 31ஆம் திகதியுடன் ஓய்வு பெறவுள்ளதையடுத்தே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
»மேலும்» |
| |
|
இராணுவத்தில் மேலும் 50 ஆயிரம் பேர் இணைக்கப்படுவர்: ரம்புக்வெல
[புதன்கிழமை, 01-07-2009, 20:30 GMT]
பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு 50ஆயிரம் பேரை புதிததாக இணைத்து வடக்கில் பாதுகாப்பினைப் பலப்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
»மேலும்» |
| |
|
உதயன் பத்திரிகைக்கு இனிமேல் தடையில்லை: ஜனாதிபதி உத்தரவாதம்
[புதன்கிழமை, 01-07-2009, 20:30 GMT]
யாழ் குடாநாட்டிலிருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை தடையின்றி வெளிவருவதற்கு அந்தப் பத்திரிகை ஆசிரியரிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவாதமளித்துள்ளார். கடந்தவாரம் நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு எனும் பெயரில் உதயன் பத்திரிகைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததுடன், இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சில பத்திரிகை முகவர்களுக்கு துண்டுப்பிரசுரமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
»மேலும்» |
| |
|
வணங்காமண் கப்பல் பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பாடு
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
புலம்பெயர் தமிழர்களின் உதவிப் பொருட்களை ஏற்றி வந்த வணங்காமண் என்னும் கப்பலில் உள்ள பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உடன்பட்டுள்ளது. இதனையடுத்து, அதனைப் பெற்று இலங்கைக்கு அனுப்பும் பணிகளில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வெளியுறவு அமைச்சு கேட்டதற்கிணங்க, இந்த விடயம் தொடர்பாக தாம் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தை தொடர்பு கொண்டதாகவும், அந்த பொருட்களை ஏற்க இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் ஒப்புக்கொண்டதாகவும் இந்திய செஞ்சிலுவை சங்கம் தெரிவித்தது.இதனையடுத்து நிவாரணப் பொருட்களைத் தாம் பெற்று இலங்கைக்கு வேறு ஒரு கப்பலில் அனுப்ப நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இந்திய செஞ்சிலுவைச் சங்க அதிகாரி
»மேலும்» |
| |
|
நோர்வே தமிழ் ஆலயம் பொலிஸாரின் கண்காணிப்பில். புலிகள் மிரட்டல்.
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் கடந்த 11 ஆண்டுகளாக இயங்கிவரும் சிவசுப்பரமணிய ஆலயம் அந்நாட்டு பொலிஸாரின் கண்காணிப்பில் வந்துள்ளதாக தெரியவருன்றது. புலிகள் அவ்வாலயத்தின் நிர்வாகத்தினருக்கு விடுத்த மிரட்டலையடுத்து நிர்வாகத்தின் ஒருதொகுதியினர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலை அடுத்தே இந்நிலை உருவாகியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல முக்கிய விடயங்கள் ஒப்புதல் வாக்குமூலமாக நிர்வாக அங்கத்தினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தாம் புலிகளின் மிரட்டலுக்கு உள்ளான விடயத்தை ஆதாரப்படுத்தும் விடியோக்களும் பொலிஸாருக்கு
»மேலும்» |
| |
|
இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டோம்: சரணடைந்த புலி உறுப்பினர்கள்
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ, அங்கு புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் இருக்கும் சரணடைந்துள்ள புலி உறுப்பினர்களை நேரில் சந்தித்தார். பூந்தோட்டம் நிவாரணக் கிராமத்தில் படையினரிடம் சரணடைந்த 663 புலி உறுப்பினர்களும் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. புலிகள் அமைப்பில் தலைமைப் பதவி வகித்தவர்களும் இந்நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு விசேட புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் செயற்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் தங்கியிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களது பொழுதுபோக்கிற்காக ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை அவர்களுக்கு
»மேலும்» |
| |
|
மடுமாதா தேவாலய உற்சவம்.
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
கடந்தவாரம் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட மடுத்தேவாலய உற்சவம் இவ்வாண்டு மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் உள்ள மிதிவெடிகளை அகற்றுவதற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
»மேலும்» |
| |
|
இதுவரை 10 ஆயிரத்துக்கும் அதிகமான புலிகள் படையினரிடம் சரண் : உதய நாணயக்கார
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
இது வரை 10000 அதிகமான விடுதலைப்புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்தார். இன்று பாதுகாப்பு அமைச்சகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பொலிசாருக்குக் கிடைக்க பெறும் தகவலைத் தொடர்ந்து விடுதலைப்புலி இயக்கத்துடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலைத் தொடர்ந்து பல ஆயுதங்கள் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடற் சமரின் போது உபயோகிக்கப்படும் டொபெடோ லோஞ்சர்( டொர்பெடொ லௌன்செர்) ஒன்றையும், இரண்டு டொபெடோஸ் (டொர்பெடொஎச் ) மற்றும் 130 மில்லி மீற்றர் நீளமுடைய 7 எறிகணைகளையும் நேற்றைய தினம் 8 ஆம் படையணியினர் மீட்டுள்ளனர் .டொபெடோஸ் ஒவ்வொன்றும் 26 அடி நீளமும் 7
»மேலும்» |
| |
|
யேமன் விமான விபத்தில் ஜந்து வயது குழந்தை உயிருடன் மீட்பு
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
யேமன் விமானத்தில் பயணித்த ஜந்து வயது குழந்தை ஒன்றை மீட்பு பணியாளர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். யேமன் தலைநகர் இருந்து பரிஸ் நோக்கி 150 பயணிகளுடன் பயணித்த யேமானியா ஏர்லைன்ஸ் விமானம் இந்துசமுத்திரத்தின் காமோறுஸ் தீவுகூட்டத்திற்கு அண்மையில் பறந்து கொண்டிருந்த போது விபத்திற்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் 11 பணியாளர்கள் 3 சிறுவர்கள் உட்பட 150 பயணிகள் பயணித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. விபத்து நடந்த இடத்தில் இருந்து பல சடலங்களை மீட்டதாக தெரிவித்த மீட்பு பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளதுடன் இந்த விபத்தில் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த ஜரோப்பிய ஒன்றியம், சர்வதேச தரத்திலான விமான உற்பத்தி கட்டளைகளை மீறி அமைக்கப்படும் விமானங்களில் பயணம் செய்வது பயணிகளுக்கு பாதுகாப்பற்றது எனவும், இவ்வாறான விமானங்களை கறுப்புபட்டியலில் சேர்ப்பதுடன்
»மேலும்» |
| |
|
150 பயணிகளுடன் யேமன் விமானமொன்று இந்து சமுத்திரப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
150 பயணிகளுடன் யேமன் விமானமொன்று இந்து சமுத்திரப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கமரோஸ் தீவுப் பகுதி கடற்பரப்பில் இந்த விமானம் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விமானத்தில் பயணித்தவர்கள் உயிர் தப்பியிருக்கக் கூடும் என்பதில் சந்தேகம் நிலவுவதாக கமரோஸ் துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மடகஸ்கார் தீவுகளுக்கு 300 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கமரோஸ் தீவுகளில் இந்த விமானம் வீழ்ந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை இந்த கொடூர விமான விபத்து இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த விமானம் பற்றிய மேலதிக விபரங்களோ, விபத்து இடம்பெற்ற சரியான இடம் குறித்த தகவல்களோ இதுவரையில் வெளியிடப்படவில்லை. இந்த விபத்தில் எவரேனும் உயிர் தப்பியிருக்கக் கூடும் என்பதற்கான சந்தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தை மீட்கும் பணிகள்
»மேலும்» |
| |
|
இன்று நள்ளிரவு முதல் கேஸ் விலைமாற்றம்-நுகர்வேர் அதிகார சபை
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
12.5 கிலோ லாவ் கேஸ் சிலிண்டரின் விலை 100 ருபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் 12.5 கிலோ செல் கேஸ சிலிண்டரின் விலை 53 ருபாவினால் குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த நுகர்வோர் அதிகார சபை இவ்விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
»மேலும்» |
| |
|
அரசியல் சாசனத்தின்படி உரிய நேரத்தில் தேர்தலை நடத்த தான் தயார் ‐ ஜனாதிபதி
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
அரசியல் சாசனத்தின்படி உரிய நேரத்தில் தேர்தலை நடத்த தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுத்நதிரக் கூட்டமைப்புடன் மக்கள் இருக்கும் போது, தான் தேர்தல்களுக்கு அச்சமடையவில்லை எனவும் அவர் தெரிவித்து;ளளார். கடந்த 27 ஆம் திகதி ஹந்துகலவில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதேவேளை தேர்தல் ஒன்றை நடதடதாமல், ஜனாதிபதியின் பதவி காலத்தை நீடிப்பது குறித்த பிரசாரங்களை தொடர்ந்தும் மேற்கொள்ள போவதாக மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேர்தல் ஒன்றை நடத்தாமல் பதவியில் இருப்பது பொருத்தமற்றது என ஏனைய அமைச்சர்கள் கூறியுள்ள கருத்து தொடர்பில் பதிலளித்துள்ள அமைச்சர் தென்னகோன், இந்த அமைச்சர்களுக்கு தமது கருத்தை வெளியில் கூற தைரியம் இலலை என குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஒருபோதும் தான்
»மேலும்» |
| |
|
சீனாவில் நில நடுக்கம்
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
சீனாவில் உள்ள கிச்சுவான் பிராந்தியத்தில் கடந்த ஆண்டு நில நடுக்கம் ஏற்பட்டு 80 ஆயிரம் பேர் பலியானார்கள். அதே பகுதியில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 5.1 புள்ளியாக பதிவாகி இருந்தது. சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
»மேலும்» |
| |
|
ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் !
[செவ்வாய்க்கிழமை, 30-06-2009, 23:55 GMT]
பொப் இசை உலகின் மன்னன் மைக்கல் ஜாக்சனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. மைக்கல் ஜாக்சனின் உயிர் பிரியும் நேரத்தில் அவரது உடல் வெறும் எலும்புக்கூடு போல காட்சியளித்துள்ளது. பரிசோதனையின் போது அவரது வயிற்றில் வெறும் மாத்திரைகள் மட்டுமே இருந்துள்ளன. கடைசிக் காலத்தில் அவரது தலையில் முடிகள் இல்லை. செயற்கை அழகிற்காக ‘விக்’ பயன்படுத்தி வந்துள்ளார். அவரது இடுப்பு, தொடை மற்றும் தோள் பகுதிகளில் ஊசி குத்தப்பட்ட அடையாளங்கள் ஏராளமாக காணப்பட்டன. அவர் தினமும் 3 முறை போதைத் தன்மை உடைய வலி நிவாரண மருந்துகளை பல வருடங்களாக பயன்படுத்தி வந்துள்ளார். அதன் விளை வாக அந்த அடையாளங்கள் ஏ& |