செய்திகள்

அறிக்கைகள்

கட்டுரைகள்

நேர்காணல்கள்

தமிழ் அலை மாத இதழ்

 »தமிழ் அலை இணையத்தளத்தின் புதிய செயற்பாடுகள் பரீட்சிக்கப்படுகின்றது.
 

.

 » அறிக்கைகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக வலுவான அரசியல் கூட்டணிக்கு அனைத்து அரசியல் தலைமைகளும் முன்வரவேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவரும், நிருவாகப் பொறுப்பாளருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார்.

 

[சனிக்கிழமை, 01-12-2007, 12:45 GMT]

 

முன்னொரு போதுமில்லாத நெருக்கடிகளையும், இழப்புகளையும், தோல்விகளையும் தற்போது புலிப் பயங்கரவாதம் சந்தித்து வருகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிராகத் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஆக்கபூர்வமான, காத்திரமான பதிலடி இராணுவ நடவடிக்கைகள் தொடருமானால் இன்னும் சிறிது காலத்தில் இத்தீவு பயங்கரவாத அச்சுறுத்தலற்ற சுதந்திர தேசமாக மாறிவிடும் என்பதில் ஐயமில்லை. இதுவே இத்தேசத்து மூவின மக்களினதும் எதிர்பார்ப்பும் அபிலாசையும் கூட. இத்தருணத்தில் தோல்வியின் விளிம்பில் நிற்கும் பயங்கரவாதத்திற்கு மறு பிரவேசம் அளிக்கும் எத்தவறையும் எக்கட்சியும் செய்யாமல் இந்நாட்டின் ஐக்கியம், ஒருமைப்பாடு, இறைமை போன்றவற்றிற்கு குந்தகம் விளைவிக்காமல் அனைத்து இன மக்களினதும் அபிலாசைகளையும், அரசியல் உரிமைகளையும் உறுதிப்படுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான ஜனநாயக அரசியல் கூட்டணிக்கு அனைத்து அரசியல் தலைமைத்துவமும் முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவரும், நிருவாகப் பொறுப்பாளருமான பிள்ளையான் தெரிவித்துள்ளார். «மேலும்»

 

அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மின்னஞ்சல் அச்சுறுத்தல்களுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது அதனை கூர்ந்து நோக்கும் போது அனைவருக்கும் தெளிவாகும். – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

 

[செவ்வாய்க்கிழமை, 24-04-2007, 08:25 GMT]

 

கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பிரச்சினையில் சேவையாற்றுகின்ற சர்வதேச, உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எமது அமைப்பின் பெயரின் மூலம் மின்னஞ்சல் வழியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்தாகக் கூறப்படும் அச்சுறுத்தல் தொடர்பாக நாம் கவனம் செலுத்துகின்றோம். அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் மின்னஞ்சல் அச்சுறுத்தல்களுக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது அதனை கூர்ந்து நோக்கும் போது அனைவருக்கும் தெளிவாகும். வட, கிழக்கு பகுதிகளில் இன்று நடைபெறுகின்ற பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் காரணமாக எமது இலட்சக்கணக்கான மக்கள் உள்ளக அகதிகளாக இடம் பெயர்ந்து அல்லலுறுகின்றனர். எமது மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் அளிக்கின்ற சேவை அளப்பெரியது. நாம் அதனை என்றுமே மதிக்கின்றோம். வரவேற்கின்றோம். மட்டுமன்றி எம்மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்யும் சேவைக்காக நாம் நன்றியுள்ளவர்களாகவும் உள்ளோம். இவ்வாறான நிலையில் அரச சார்பற்ற நிறுவனங்களை நாம் எத்தேவைக்காக அச்சுறுத்த வேண்டும். «மேலும்»

 

வாழ்த்துக்கள் கூறிய ஜனநாயக விரும்பிகளே உங்களுக்கு எமது நன்றிகள்- க.மகேஷ், சமாதானச்செயலகப் பொறுப்பாளர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

 

[ஞாயிற்றுக்கிழமை, 15-04-2007, 09:38 GMT]

 

கடந்த 12-04-2004 அன்று தமிழ் அலை இணையத்தளத்தில் வெளியான எமது சமாதானச்செயலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் பற்றிய செய்தியை வாசித்தறிந்து எம்முடன் தொலைபேசி வாயிலாகவும், மின் அஞ்சல் வாயிலாகவும்,மடல் மூலமும் தொடர்புகொண்டு வாழ்த்துக்களைத்தெரிவித்து, ஆலோசனைகளை வழங்கி, எமது இந்த மக்கள் நலன் நோக்கிய ஜனநாயக அரசியல் பயணத்திற்கு பூரண ஆதரவையும், ஒத்துழைப்பையும் தருவதற்கு முன்வந்த சகல ஜனநாயக விரும்பிகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். உங்கள் ஆதரவிலும், ஆசியிலும்தான் எமது வளர்ச்சி தங்கியுள்ளது. இது இவ்வாறிருக்க நெல்மணிகளுக்குள் பதர்களாய் இப்படியும் சிலர், “ஒன்றுக்கும் இயலாத முடவன் ஆற்றுக்கப்பால் நின்று கத்தினானாம்” என்ற முதுமொழிக்கு ஒப்ப பிரபாக்குழுவின் புல்லுருவிக்கூட்டங்கள் சில திரைமறைவுக்கு அப்பால் நின்று கெட்டவார்த்தைப்பிரயோகங்களால் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். «மேலும்»

 

மக்களை ஏமாற்றி பணம் பறிக்க பிரபாபுலிகள் மேற்கொள்ள துடிக்கும் மற்றுமோர் திருகுதாளம், மக்களே விழிப்பாய் இருங்கள்! – மீனவள்

 

[ஞாயிற்றுக்கிழமை, 15-04-2007, 09:19 GMT]

 

ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுகின்ற கதையாய் உள்ளது “ கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை புனர்வாழ்வு கழகம் நிறைவேற்ற நடவடிக்கை” என்று கொட்டை எழுத்துக்களில் புதினம் இணையத்தளத்தில் 14-04-2007 அன்று வெளியான செய்தி. மக்கள் சேவை என்ற போர்வையில் உலகம் முழுவதும் குசாலாக தமது லக்ஷரி லைப்பிற்காக உண்டியல் குலுக்கி வந்த புலிகள் அண்மைக்காலமாக இவர்களின் போலி வேடங்களை நன்கு உணர்ந்து கொண்டதால் உலகநாடுகள் விதித்த இறுக்கமான தடைகளால் நிலைகுலைந்து போயுள்ளனர். பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்ற கதையாய் கிழக்;கிலும் பாரிய பின்னடைவுகளை சந்தி;த்து வருகின்றனர் பிரபா புலிகள். இந்த நிலமைகளினால் அவர்களது அடித்தளமே ஆட்டம் கண்டுள்ளதாக உள்ளகச்செய்திகள் தெரிவிக்கின்றன. «மேலும்»

 

வெருகல் படுகொலை – சித்திரை- 10

 

[திங்கட்கிழமை, 09-04-2007, 10:28 GMT]

 

தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளி;ன் சிரம்தாழ்த்திய வணக்கங்கள் 2007 சித்திரரை 10 ஆம் நாள், வெருகல் ஆற்றங்கரைப் படுகொலைக்கு ஆண்டுகள் மூன்று கடந்து விட்டாலும், இன்று நேற்று நடந்ததுபோலவே எம் நெஞ்சங்களை வருடிக் கொண்டிருக்கின்றது. எம்மனங்களில் அச்சம்பவம் எப்போது நினைவுக்கு வந்தாலும் எம் கண்கள் கண்ணீரைத் தாரைதாரையாக கொட்டுகின்றன. வன்னிப்புலிகளையும் எம்மவர் என்றுதான் நினைத்திருந்தோமே தவிர எதிரியாக நினைக்கவில்லை, எள்ளளவும் பகைக்கவில்லை, போர்க்கொடி தூக்கவுமில்லை, போக்கிரியாக நடக்கவுமில்லை. ஒதுங்கினோம் ஒன்றுமே வேணாமென்று ஒதுங்கினோம். இருந்தபோதும் அவர்கள் எங்களை விட்டுவைக்கவேயில்லை. கிழக்கில் கபடத்தனத்துடன் தான் கால்பதித்தார்கள், கண்ட இடமெல்லாம் கடித்துக் குதறினார்கள், கதறக்கதறக் கற்பழித்தார்கள். ~~அண்ணா|| ~~அண்ணா|| என்றபோது அறைதான் விட்டார்கள். கடைசியில் காமமெல்லாம் தீர்ந்தபின், சுக்குநூறாகிப் போகும் வரை சுட்டே கொன்றார்கள். வன்னியிலிருந்து வந்த பிரபாக்குழு காடையர்களுக்கு ~~அண்ணா|| என்னும் வார்த்தைக்கு அர்த்தமும் தெரியாது. உண்மையான உறவுக்குப் பாசமும் கிடையாது. கறைபடிந்துவிட்ட அவர்களது உள்ளங்களைக் கொண்டு காடையர்களாகவும், காமுகர்களாகவும் காடுகளில் சுற்றித்திரிந்து சூட்சுமங்கள் செய்யத்தான் தெரியும். நன்றியுணர்வோ, நல்லொழுக்கமோ கிஞ்சித்தும் கிடையவே கிடையாத காட்டுமிராண்டிகள் அவர்கள். நல்லொழுக்கமோ, நன்றியுணர்வோ இருந்திருந்தால்; இரவோடிரவாக வந்திருக்கவும் மாட்டார்கள், ~~வாருங்கள் அண்ணா|| என்று அன்போடு அழைத்தவர்களை ஆடைகிழித்து அசிங்கப்படுத்திக் கொன்றிருக்கவும் மாட்டார்கள். நன்றிகெட்டவர்கள்! நாய்களைவிடக் கேவலமான நயவஞ்சகர்கள்! «மேலும்»

 

வெருகல் படுகொலை சித்திரை – 10

 

[திங்கட்கிழமை, 09-04-2007, 10:24 GMT]

 

இன்றைய தினம் அன்றொரு பொழுதில் வேங்கைப் பெண்கள் விட்ட கண்ணீரும் சிந்திய செந்நீரும் இன்னும் காய்ந்து விடவில்லை.

அவர்களின் உயிர் மூச்சு அடங்கும் போது விட்ட சாபங்களும் கொண்ட இலட்சியங்களும் இன்னும் ஓய்ந்து விடவில்லை.

இதுவரை காலம் கிழக்கையே காணாத வன்னிக்கூட்டம் இரத்த ருசிக்கும், காமப் பசிக்கும் தான் முதல் தடவையாக கால் பதித்தது எம் மண்ணில்.

அன்று வித்தான எம் வீர வேங்கைகளின் உரம்தான் கிழக்கு விடிவின் உரம் என்பதை மறந்து போனார்கள் கயவர்கள்.

இக்கயவர் கூட்டத்தை விரட்டியடித்து எம் தலைவன் கருணா அம்மான் தலைமையில் சரித்திரம் படைத்து நிம்மதியாக வாழவைப்போம் எம் மக்களை.

ஓன்றுபடுவோம்! ஓங்கியடிப்போம்!
நிம்மதி பெறுவோம் நிரந்தரமாக!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரிஎம்விபி)
«மேலும்»

 

அப்பாவிப் பொது மக்கள் மீதான தாக்குதல்கள் பயங்கரவாதத்தின் உச்ச வெளிப்பாடாகும்- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

 

[திங்கட்கிழமை, 09-04-2007, 10:11 GMT]

 

அப்பாவி பொது மக்கள் மீதான தாக்குதல்களும் பலியெடு;ப்புக்களும் பயங்கரவாதத்தின் உச்ச வெளிப்பாடாகும். தமது இறுதிக்கட்டத்தை அண்மித்துக்கொண்டிருக்கும் புலித்தலைமையின் மிலேச்சத்தனமான அப்பாவி பொதுமக்கள் மீதான தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். மனித உயிர்களை நேசிக்கும் மாண்பினை என்றோ மறந்துவிடட் இபபயங்கரவாதிகளின் கோலைத்தனமான தாக்குதல்களினால் நாகரிகமுள்ள மனித சமுதாயம் வெட்கித் தலைகுனிகின்றது. இப்பயங்கரவாதத்தை தொடர்ந்தும் அனுமதிப்பது மனிதநேயத்திற்கு ஏற்படும் இழுக்காகும். «மேலும்»

 

கிழக்கு மாகாண செய்திகள்
________________________
மாவடிவேம்பு இராணுவ முகாம் மீது பிரபா குழு மேற்கொண்ட தாக்குதலையடுத்து ரிஎம்பிவி விடுத்துள்ள அறிக்கை

அன்பார்ந்த கிழக்கு வாழ் மக்களே,

 

[வியாழக்கிழமை, 22-03-2007, 11:25 GMT]

 

எமது கிழக்கு மண்ணையும், மக்களையும் ஆக்கிரமித்து அட்டூழியங்கள் புரிந்து வரும் பிரபா குழுவின் இறுதி அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் பணிகள் மும்முரமாக இடம் பெற்று வருகின்றன. எம் மக்களைக் கொன்று, எம் சிறார்களின் கல்வியைப் பாழ்படுத்தி அவர்களைக் கடத்தி கொலைக் களம் அனுப்பி, எம் சொத்துக்களையும் சுரண்டி, சூறையாடி எம் மக்களின் அகதி, அவல வாழ்விற்கு காரணமாய் இருந்த வன்னிக் கும்பலின் சப்த நாடியும் அடங்கப் போவது நெருங்கி விட்ட இவ்வேளையில் தொடர்ந்தும் வன்னியில் பெயரளவில் தம்மை மட்டும் பாதுகாத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்களை வெல்ல முடியாத யுத்த்திற்கு கொலைக் களம் அனுப்பி எம் இளைஞர்கள் மரணமாவதற்கு தூண்டு கோலாக இருந்து வருகின்றனர். «மேலும்»

 

எம் கல்வியைப் பாதுகாப்போம்
அன்பார்ந்த மாணவர்களே, ஆசிரியர்களே, பெற்றோர்களே!

 

[வியாழக்கிழமை, 22-03-2007, 11:01 GMT]

 

எமது மாவட்டத்தின் கல்வியைத் திட்டமிட்டு சீர்குலைக்கும் வகையில் பிரபா குழுவினரும் அவர்களின் கைக்கூலிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் செயற்பட்டுவருகின்றனர். ஏற்கனவே எம் மக்களையும் கொன்று எம் மண்ணை ஆக்கிரமித்து எம் பொருளாதாரத்தையும் சுரண்டிக் கொண்டு எம் மானம் காத்த எஞ்சியிருக்கும் கல்வியையும் திட்டுமிட்டு பாழ்படுத்தி எம் சமூகத்தையும் எதிர்கால சந்ததியினரையும் அறிவீனர்களாக, நாகரீக உலகத்திற்கு தகுதியற்றவர்களாக மாற்றுவதற்கு இக்கயவர் கூட்டம் செயற்படுகின்றது. «மேலும்»

 

இராஜதந்திரிகள் மீதான பிரபா குழுவின் தாக்குதலுக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை

 

[புதன்கிழமை, 28-02-2006, 10:35 GMT]

 

27.02.2007 நேற்றுக் காலை மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமை விவகாரங்களுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க குழுவினர் மீதும் மற்றும் அவர்களுடன் விஜயம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் மட்டக்களப்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய ஹெலிகொப்டர் மீது பிரபா குழுவின் நடத்திய மோட்டார், எறிகணைத் தாக்குதலானது மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதுடன் அத்தாக்குதலானது பல உண்மைகளை எம்மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் அம்பலப்படுத்தியுள்ளது. «மேலும்»

 

தனது குறுகிய அரசியல்; லாபங்களுக்காக தமிழ்-முஸ்லிம் சகோதரத்துவ உறவை சீர்குலைக்க முனைகிறார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம். சகோதர உறவுக்காக எம்பணி என்றும் தொடரும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்.

 

[சனிக்கிழமை, 13-01-2007, 15:26 GMT]

 

தமிழ்-முஸ்லிம் மக்களிடையே குறுகிய அரசியல் லாபத்திற்காகவும், தனது தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் சகோதரத்துவ முரண்பாட்டை கிழக்கு மண்ணில் தோற்றுவிக்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப்; ஹக்கீம் திட்;டமிட்டு செயலாற்றி வருவதாக நாம் ஐயங்கொள்ள வேண்டி இருக்கிறது. அவர் 09.01.2007 அன்று பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை இவ்வையத்தை மேலும் உறுதிசெய்கின்றது. பொறுப்பு மிக்க அரசியல் கட்சியொன்றின் தலைவர் குறுகிய எண்ணங்களுக்காகவும், லாபங்களுக்காகவும் செயற்படுவது வேதனைக்குரிய விடயம். தமிழ்-முஸ்லிம் சகோதரத்துவ உறவில் நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வரும் வேளையில் எம்மீதான சகோதரத்துவ நலனிற்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் விசனத்தன்மையானது. «மேலும்»

 

வாகரையில் இருந்து வெளியேறும் அகதிகளுக்கு உதவ முன்வாருங்கள். புகலிடத்தமிழர்களை நோக்கிய ஜனநாயகத்துக்கான கிழக்கிலங்கை முன்னணியின் உருக்கமான வேண்டுகோள்.

 

[சனிக்கிழமை, 23-12-2006, 01:00 GMT]

 

கடந்த ஏப்ரலில் இருந்து கிழக்கை மையப்படுத்தி நடைபெற்றுவருகின்ற யுத்தமானது அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையினை சீர்குலைத்து பாரிய சிக்கலுக்குள்ளாக்கி இருக்கின்றது. வாகரையில் இருந்து புலிகளை வெளியேற்றுவதற்காக இராணுவமும், இராணுவத்தை வெளியேற்ற புலிகளும் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கியுள்ளனர். ஆனால் இருதரப்பினராலும் நிர்க்கதியாக்கப்பட்டு அகதிகாளாக மக்களே வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. «மேலும்»

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மானின் மாவீரர் தின அறிக்கை

 

[திங்கட்கிழமை, 27-11-2006, 03:00 GMT]

 

தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நிம்மதியான வாழ்விற்காகவும் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த எம் மாவீரர்களை நினைவு கூரும் இச்சந்தர்ப்பத்தில் சில முக்கிய விடயங்கள் குறித்து அளாவ அவாவுற்றுள்ளேன். உன்னதமான இலட்சியங்களைச் சுமந்து அதற்காக தம் உயிர்களை அர்ப்பணித்த எம் மாவீரர்களின் தியாகமும், அர்ப்பணிப்பும் காலத்தாலும், காவியத்தாலும் மறக்கப்பட முடியாது. தாய் மண்ணிற்காகவும், தன் இனத்திற்காகவும் யாவையும் துறந்து சமர்களம் புகுந்து வீரகாவியமாகி விட்ட எம்மாவீரர்களுக்கு நாம் என்றும் தலைவணங்குகின்றோம். தமிழின வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது எம்மாவீரர்களின் சரிதைகள் . அவர்கள் என்றுமே கௌரவிக்கப்பட வேண்டியவர்கள். ஆனாலும் இம்மாவீரர்களின் தியாகங்களும், அர்ப்பணி;ப்புக்களும் இன்று பிரபாகரன் எனும் ஒரு தனி மனிதனின் அதிகார மோகத்திற்கும், ஏதோச்சதிகார வாழ்விற்கும் விளம்பரமாகப் போவதுதான் வேதனை. தமிழின மக்களின் நிம்மதியான வாழ்விற்காக தம் உயிர்களை துச்சமாக மதித்து வீரகாவியமான மாவீரர்களை எம்மக்களின் நிம்மதியான வாழ்விற்கு இன்று பெரும் தடையாகவுள்ள பிரபாகரனும், அவரது கூட்டமும் நினைவு கூருவது அம்மாவீரர்களின் தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் களங்கப்படுத்துகின்றது. இதனைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மாவீரர்களின் தியாகங்களும், அவர்கள் சுமந்த இலட்சியங்களும் வியாபார, விளம்பரப் பொருட்களாகிவிட்டன. தம் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவும், தமது சுக போக வாழ்விற்காகவும் மாவீரர்கள் விற்கப்படுகின்றனர்;. மாவீரர்கள் என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்கள், போற்றப்பட வேண்டியவர்கள். ஆனால் சில்லறைத்தனமான சிதறல்களாக அவர்களின் தியாகங்கள் விலை போவதுதான் வேதனை. தன் பிறந்த தினத்தின் பெருமையை பேர் சொல்ல பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகங்கள் துணைக்கழைக்கப் படுகின்றன. «மேலும்»

 

யுனிசெப் அமைப்பின் எம்மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அறிக்கை

 

[புதன்கிழமை, 15-11-2006, 01:05 GMT]

 

ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியமான யுனிசெப் அமைப்பின் விசேட பிரதிநிதி திரு. அலன் றொக் அவர்கள் சிறுவர்களின் நலன், எமது அமைப்பின் செயற்பாடுகள் குறித்து எம்மீது சுமத்திய குற்றச் சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானது, ஆதாரமில்லாதவை. எழுந்தமானமான தகவல்களின் அடிப்படையிலும், தவறான புரிந்துணர்வின் காரணமாகவுமே இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் மீது சுமத்தப் படுவதாகவே நாம் கருதுகின்றோம். இவை குறித்து எமது அமைப்பு மனக்கிலேசம் அடைவதுடன் இவற்றுக்கெதிராக எமது வன்மையான கண்டனத்தையும் தெரிவிக்கிறோம். «மேலும்»

 

ஜனநாயக,அகிம்சைவாதிகளின் மரணங்கள் பயங்கரவாதிகளின் மாமனிதர் பட்டங்களால் களங்கப்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை.

 

[ஞாயிற்றுக்கிழமை, 12-11-2006, 03:02 GMT]

 

ஜனநாயக மரபுகளில் நம்பிக்கை கொண்டு அவ்வழியில் மக்களால் நேசிக்கப்பட்டு அகிம்சைவழியில் தம்மின மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த ஜனநாயகவாதிகளினதும் அகிம்சைவாதிகளினதும் மரணங்கள் பங்கரவாதிகளினால் வழங்கப்படும் மாமனிதர் பட்டங்களால் கொச்சைப்படுத்தப்படுகின்றன. யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக அகிம்சைப் பாசறையில் வளர்க்கப்பட்டவரும் அவ்வழிகளில் நம்பிக்கை கொண்டவருமான மரணித்த நடராஜா ரவிராஜ் அவர்களுக்கு பிரபாகரன் எனும் இரத்த தாகம் பிடித்த பயங்கரவாதியினால் மாமனிதர் பட்டம் வழங்கப்பட்டமை வேதனைகளும் வேடிக்கைகளும் நிறைந்ததாகும். சாத்தான் வேதம் ஓதுவதைப் போல ஜனநாயகவாதிகளுக்கும், அகிம்சைவாதிகளுக்கும் மாமனிதர் பட்டம் வழங்க பயங்கரவாதிகளுக்கு என்ன அருகதை உண்டு. ஜனாநாயகத்தைத் தம் துப்பாக்கி முனைகளில் சிறைபிடித்துக்கொண்டு ஜனநாயக நீரோட்டத்தில் இணையும், அதில் நம்பிக்கை கொண்டவர்களையும் மாற்றுக் கருத்துடையவர்களையும் கொன்று குவித்து ஆயுத அடக்குமுறையில் மக்களை வைத்திருக்கும் இப் பயங்கரவாதிகளின் குறுகிய லாபங்களுக்காக மாமனிதர் பட்டங்கள் விலைபோவது வேதனையளிக்கின்றது. «மேலும்»

 

பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். குற்றவாளிகள் இனம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கை.

 

[சனிக்கிழமை, 11-11-2006, 01:01 GMT]

 

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டுள்ளமையை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வன்னமையாகக் கண்டிக்கின்றது. இவரின் இழப்பினால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கின்றோம் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. «மேலும்»

 

பிரதான கட்சிகளின் புரிந்துணர்வு உடன்பாடு இனப்பிரச்சினையின் அரசியல் தீர்வுக்கோர் அரிய சந்தர்ப்பம் ஆனாலும் இது தொடர்பான தமிழ் பேசும் மக்களின் ஐயங்களும் தெளிவுபடத்தப்பட வேண்டும்

 

[செவ்வாய்க்கிழமை, 31-10-2006, 12:15 GMT]

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக ஆளும் சுதந்திரக் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கட்சியும் புரிந்துணர்வு உடன்பாடு கண்டுள்ளமையை நாம் வரவேற்கின்றோம். இவ்வுடன் பாடு இந்நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைத் தீர்வின் அரசியல் தேடலுக்கான அரியதொரு வாய்ப்பாகவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் பார்க்கின்றனர். ஆனாலும் பிரதான கட்சிகளின் புரிந்துணர்வு உடன்பாடு தொடர்பில் தமிழ் பேசும் மக்களின் ஐயங்களும் தெளிவுற வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. «மேலும்»

 

வாழ்த்துகிறேன் “வாழ்க பல்லாண்டு” !!!!