|
இலங்கையின் புராதன துறைமுக கட்டமைப்பு தொடர்பான ஆகழ்வாராய்ச்சிகள் ஆரம்பம்
[திங்கட்கிழமை,
08-02-2010, 22:30 GMT]
இலங்கையைக் கேந்திர நிலையமாகக் கொண்டு இந்து சமுத்திரத்தில் அமைந்திருந்த புராதன துறைமுக கட்டமைப்பு தொடர்பான அகழ்வாராய்ச்சிகளை தொல்பொருள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இந்த திட்டத்தை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், ரூஹ_ணு பல்கலைக்கழகம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியன கூட்டாக நடைமுறைப்படுத்துவதாக திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் பெரேரா தெரிவித்துள்ளார். இதன் முதற்கட்டமாக மன்னார் புராதன மாதோட்டம் துறைமுகம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றிய அகழ்வாராய்ச்சிகளின்போது சுமார் 3ஆயிரத்து 700வருடங்களுக்கு முன்னரான காலத்தில் துறைமுகம் அமைந்திருந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கலாநிதி நிமல் பெரேரா தெரிவித்துள்ளார். கற்களால் செய்யப்பட்ட ஆயுதங்கள், றோம் மற்றும் சீன நாணயங்கள் என்பனவும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் மேலும் பல புராதன துறைமுகங்களை அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள எண்ணியுள்ளதாக தொல்பொருள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிமல் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.
|