வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா எண்ணிக்கையை குறைக்க பிரிட்டன் முடிவு

 
[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

 
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசாக்களின் எண்ணிக்கையை குறைப்பதென பிரிட்டன் முடிவு செய்துள்ளது இரு வாரங்களுக்குள் இப்புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரவுள்ளன. மாணவ விசாக்களை வழங்குவதற்கான விதிகள் கடுமையாக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆங்கிலம் பேசும் ஆற்றல் இருக்கவேண்டும் என்பதும், குறுகியகால பிரிட்டிஷ் கற்கை நெறிகளுக்கு வருவோர் அவர்களில் தங்கியிருப்போரையும் தம்முடன் அழைத்து வருவதை தடைசெய்தல் போன்றவை உட்பட பல கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஜோன்ஸன் தெரிவித்துள்ளார். உண்மையாக கல்விகற்க வருவோரை இலக்குவைத்து இந்த கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்த அவர், தொழில் செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரிட்டன் வருவோருக்காகவே இந்நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளார். தோல்வியில் முடிவடைந்த சிக்காகோ விமானக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக பிரதமர் கோர்டன் பிரவுணின் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டையடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறதெனவும் அமைச்சர் கூறியுள்ளார். மேற்படி நத்தார்தின குண்டுவெடிப்பை நடத்திய சந்தேகநபரான உமர் பாரூக் அப்துல் முதலாப் லண்டனில் கல்வி கற்றவரென்றும் பிரிட்டனிலிருந்து சென்ற பின்னர் யேமெனில் அல்குவைதா இயக்கத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தியவரென்றும் பிரதமர் தெரிவித்த பின்னரே குறித்த மதிப்பீட்டுக்கு உத்தரவிடப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

 

முன் பக்கம்

அச்செடுக்க

.