|
பொத்துவில் பொலீஸ் பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரி எதிர்ப்பு ஊர்வலம்
[திங்கட்கிழமை,
08-02-2010, 22:30 GMT]
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து பொத்துவில் பொதுமக்களால் எதிர்ப்பு பேரணி ஊர்வலமொன்று நேற்றுக்காலை 9மணியளவில் நடத்தப்பட்டுள்ளது. அறுகம்பை பிரதானவீதியின் களப்புக்கட்டு சந்தியில் ஆரம்பமான கண்டன பேரணி ஊர்வலம் பொத்துவில் பொலீஸ் நிலையம்வரை சென்று பொத்துவில் பிராந்தியத்திற்குப் பொறுப்பான உதவி பொலீஸ் அத்தியட்சகர் பிரசன்னவிடம் இடமாற்றத்தை இரத்துச் செய்யக்கோரும் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பொலீஸ் மாஅதிபர், அம்பாறை மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கும் இம்மகஜர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நடந்து முடிந்த தேர்தலின்போது பொத்துவில் பிரதேசத்திலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் இவர் பாரபட்சமற்ற வகையில் சேவையாற்றியதால் அவரது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு பொதுமக்கள் குறித்த மகஜரில் கேட்டுக் கொண்டுள்ளனர்.
|