சரத் பொன்சேகா கைது

 
[திங்கட்கிழமை, 08-02-2010, 22:30 GMT]

 
முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவக் காவல்துறையினர் சற்று நேரத்திற்கு முன்னர் கைது செய்ததாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இராணுவக் குற்றச் செயல்களின் அடிப்படையில் பொன்சேகாவை கைது செய்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார். ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி செய்தியை பிபிசியும் தனது இணையயத் தளத்தில் வெளியிட்டுள்ளது.

 

முன் பக்கம்

அச்செடுக்க

.