|
தொப்பிக்கலைப் பகுதியில் பெரும்பாலான கால்நடைகள் கால்களை இழந்துள்ளது.
[வெள்ளிக்கிழமை,
21-12-2007, 15:00 GMT]
கிழக்கு மாகாணத்தை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து மீட்டெடுத்த வேளையில் அப்பயங்கரவாதம் விட்டுச்சென்ற எச்சங்களால் தொப்பிக்கலைப் பகுதியில் குடியிருந்த பெருமளவான பால் பண்ணையாளர்களின் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான கால்நடை உரிமையாளர்கள் தாங்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாகவிருந்த கால்நடைகளில் பெரும்பாலானவற்றை இழந்துள்ளதோடு மிஞ்சியிருக்கும் கால்நடைகள் கால்களை இழந்து அங்கவீனப்பட்டுள்ளதாக வேதனைப்படுகின்றார்கள்.
«மேலும்»
முதிர்ச்சியற்ற முடிவுகளால் திணறும் புலித் தலைமை.
[புதன்கிழமை,
05-12-2007, 17:00 GMT]
இலங்கையின் நிறைவேற்றதிகார முடைய ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. இவ்வாட்சியில் நாட்டின் பொருளாதார முன்னேற்றம், அபிவிருத்தி போன்ற குறிப்பிட்டுச் சொல்லும் படியாக திருப்பதியாக இல்லை. நாட்டில் கையிருப்பு வேகமாக தீர்ந்துபோகும் அதேவேளை வெளிநாட்டுக் கடன்களும் அதிகரித்து வருகின்றன. பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலையுயர்வு என்பன இவ்வரசாங்கத்திற்கு பாதகமான விடயங்களாகவே உள்ளன. ஆனாலும் இவற்றையெல்லாம் தாண்டி புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைளில் அரசு காட்டுகின்ற முனைப்பும், அரச படைகள் பெற்றுவருகின்ற வெற்றியும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களையும் தாண்டி தென்னிலங்கையில் ஒரு வலுவான ஆதரவுத் தாக்கத்தைக் கொண்டுள்ளது உண்மைதான்.
«மேலும்»
பிரபா பாஸிஸ்டுக்கள் அரங்கேற்றிய மற்றுமொரு இனச்சுத்திகரிப்பு ஊறுவ படுகொலை
-களப்புக்காரன்
[ஞாயிற்றுக்கிழமை,
15-04-2007, 09:25 GMT]
தமது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காக பிரபா கும்பல் செய்யும் சித்து விளையாட்டுக்களுள் இனச்சுத்திகரிப்பும் ஒன்று. இனங்களுக்கிடையே விரிசல்களை ஏற்படுத்தி அதில் குளிர் காய்வதென்பது அவர்களுக்கு கைவந்த கலை. இவர்களால் காலம்காலமாய் அரங்கேற்றப்பட்டு வந்த பல இனப்படுகொலைகள் காலத்தின் வரலாற்றுப் பக்கங்களில் கறைகளாய் படிந்துள்ளதுடன் மக்கள் மனங்களிலும் ஆறாத வடுக்கலாய் பதிந்துள்ளன.
இதன் ஓர் அங்கமே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள பழைய ஊறுவ என்ற சிங்கள கிராமத்தில் புத்தாண்டு தினமான நேற்று புலிப்பயங்கரவாதிகளால் அப்பாவிச் சிங்களப்பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைவெறியாட்டம். நேற்றுமாலை 4.15 மணியளவில் இடம்பெற்ற இக்கொடூரச்சம்பவத்தில் ஓரு ஆணும் ஆறு பெண்களும் அடங்கலாக ஏழு பொதுமக்கள் புலிகளின் இரத்தப்பசிக்கு இரையாகினர்.
புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று புத்தாடை அணிந்து அறுசுவை உண்டிகள் உண்டு குதூகலித்திருந்த வேளை பிரபா குழு தமது பாசக்கயிற்றை வீசும் என எள்ளளவேனும் எண்ணியிருக்கமாட்டார்கள் இந்த அப்பாவி மானுடர்கள்.
«மேலும்»
என்று முடியும் இந்த அகதி வாழ்வு, என்று மாறும் இந்த அவல நிலை ???
- “மீனவள்”
[வியாழக்கிழமை,
12-04-2007, 09:20 GMT]
“மீன்பாடு தேன்நாடு” என்று வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டம் இன்றோ அகதிகள் வாழும் மாவட்டம் என்று கூறும் அளவிற்கு மாறிவிட்டது.
போர்ச்சூழலில் அகதிகள் என்பது தவிர்க்கமுடியாத ஓர் அங்கமே. அதுவும் எமது நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில் பிரபாக்குழுவின் ஏகாதிபத்திய ஆட்சிக்கரங்களுக்குள் மனிதக்கேடயங்களாய் பயன்படுத்தப்பட்ட அப்பாவி பொதுமக்கள் சொத்து சுகம் வேண்டாம் சுதந்திரம் ஒன்றே போதும் என்று பிரபாகுழுவின் கோரப்பிடிணை துணிச்சலுடன் உடைத்தெறிந்து ஆயிரம் ஆயிரமாய் அகதி எனும் முத்திரையுடன் அரசகட்டுப்பாட்டுப் பகுதியில் கால் பதித்தனர். ஆடு,மாடு,கோழி,நாய் என ஐந்தறிவு ஜீவன்கள் கூட தமது எஜமானர்களை பின்தொடர்ந்தன. அவைகளுக்குக் கூட பிரபாக்குழுவின் அடக்குமுறை பிடிக்கவில்லை போலும். ஏனெனில் ஐந்தறிவு படைத்த வாய்இல்லா ஜீவன்களுக்கு இருக்கும் பாசம் இந்த ஆறறிவு படைத்த பிரபாகும்பலிடம் இல்லையே.
«மேலும்»
சிந்திக்க சில நிமிடங்கள் எடுங்கள்!
[ஞாயிற்றுக்கிழமை,
25-03-2007, 22:11 GMT]
பிரபாகரனின் நிதர்சனம் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்ட தினத்தில் பிரபாகுழுவில் இருந்து வீரச்சாவடைந்தவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 20 திற்கும் மேற்பட்ட போராளிகள் ஆவர். அவற்றை எல்லாம் கற்சிதமாக மூடிமறைத்த துரோகி பிரபாகரன் இன்னும் எத்தனை காலம் தான் மட்டக்களப்பு வாழ் மக்களை ஏமாற்றுகின்ற நாடகத்தையும் அவரின் ஆக்கிரமிப்பு படை மட்டு மண்ணில் தளம்பதித்து நிற்கப் போகும் நாட்களையும் இருந்து தான் பார்ப்போம் என்கின்றார்கள் மட்டுவாழ் மக்கள்.
«மேலும்»
பிரபாகரனின் மகள் துவாரகா வெளிநாட்டில் கல்வி கற்றுவர கிழக்குத் தாய்மார் பெற்றெடுத்த பெண் பிள்ளைகள் மாவடிவேம்பு இராணுவ முகாமில் மரணிப்பதா?
[வியாழக்கிழமை,
22-03-2007, 11:09 GMT]
பிரபாகரனின் அதிகார வெறியால் அவனது கிழக்கு ஆக்கிரமிப்பு சிந்தனாவாத்தால் நேற்று முன்தினமிரவு மட்டு மாவடிவேம்பு படைமுகாம் பிரபாகரனின் கைக்கூலிகளால் தாக்கப்பட்டிருந்தது. இத்தாக்குதலில் பிரபா குழுவில் 19 பேர் களப்பலியாகியதோடு, பலர் கடுமையான காயங்களுக்கும் உள்ளாகியிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 8 போரின் சடலத்தினை படையினர் கைப்பற்றியிருந்தனர். இதில் கிழக்குத் தாய் பெற்றெடுத்த பெண்ணொருவளும் பிரபாகரனின் ஆதிக்க வெறியால் களப்பலியாகி விட்டாள். ஊண்மையைச் சொல்லப் போனால் அவள் பிரபாகரனின் சுகபோக வாழ்க்கைக்காக தனது இறுதி மூச்சை மாவடிவேம்பு படைமுகாமருகில் ஏக்கத்தோடு விடுகின்றாள். ஆனால் பிரபாகரனின் குட்டிச் செல்லம் துவாரகாவோ வெளிநாட்டில் இருந்து கொண்டு ராஜகுமாரி போல் பட்டப்படிப்புப்பும், ஆங்கில மொழியில் மேதையாக வேண்டும் என்று படித்துக் கொண்டு இருக்கின்றாள்.
«மேலும்»
சுதந்திர கிழக்கு நோக்கி முதல் 41 நாட்கள்
எழுதுபவர் - பேராசிரியர் அறுமக்குட்டிபோடி
[திங்கட்கிழமை,
29-01-2007, 17:20 GMT]
முன்னுரை….
இலங்கையின் ஒன்பது மாகாண நிர்வாக பிரிப்புகளில் ஒன்றே கிழக்கு மாகாணம் ஆகும். இங்கு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களை மையமாக இருத்தி உருவாகியுள்ள கிளர்ச்சியானது விரிவடைந்து வருகிறது. இது 1948 இல் இருந்து சுதந்திர இலங்கையின் பெயரிலும் கடந்த சுமார் (30)முப்பது வருடகாலமாகதமிழீழத்தின் பெயரிலும்
கிழக்கிலங்கை மக்கள் இழந்து வந்திருக்கும் அடிப்படை மானிட உரிமைகளையும், ஜனநாயக சகவாழ்வையும் மீட்டெடுப்பதற்கான ஒரு வலுவான கோரிக்கையை அடிப்படையாக கொண்டது. ஆகவே இன மேலாதிக்க அரசிடமிருந்தும் பிரதேச மேலாதிக்க தமிழ்த் தலைமைகளிடமிருந்தும் ஜனநாயகத்தை மீட்பதற்கான ஒரு போராட்டமான இக்கிளர்ச்சியை நாம் ஒரு முகப்பட்டு வரவேற்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும், பங்களிக்க வேண்டும் ஒவ்வொரு மனிதனும் தனது பிரசவத்திலிருந்தே இவ்வுலகில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரித்துடையவன்.
«மேலும்»
புலிகள் பாடம் கற்றுக்கொள்வார்களா? மனம்மாறுவார்களா?
-படுவான்கரையான்.
[திங்கட்கிழமை,
22-01-2007, 08:01 GMT]
உலகின் எந்தவொரு முதலாளித்துவ ஜனநாயக அரசிற்கு எதிராக ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்திய எந்தக் குழுக்களோ இயக்கங்களோ நீண்டகாலத்திற்கு ஆயுதக்குழுக்களாகவோ பயங்கரவாத இயக்கங்களாகவோ நிலைத்துச் செயல்பட்டதாக வரலாறுகளில் காணமுடியாது. தாங்கள் தொடங்கிய போராட்டத்தினை குறிப்பிட்டகாலத்தினுள் தங்கள் இலட்சியங்களை இராணுவயுக்தியால் வென்று தங்கள் குறிக்கோளை அடைந்த போராட்டக் குழுக்களும் பயங்கரவாதம் கொலைக்கலாச்சாம் போன்றவற்றை கைவிட்டு பலத்த விட்டுக்கொடுப்புக்களால் பேச்சுவாhத்தை மூலம் ஜனாநயகமுறையில் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்ட ஆயுதம் தாங்கி போராடிய இயக்கங்கங்களுமே வெற்றிபெற்றதாக கடந்தகால வரலாறும் தற்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளும் நம்கண்முன்னாலும் காணக்கூடிய உண்மைகளாக நிரூபிக்கப்பட்டுள்ளன.
«மேலும்»
கிழக்கு மக்களின் முதலாவது தேசத்துரோகி பிரபாகரன் கிழக்கு மக்கள் பிரகடனம் தமிழீழப் போராட்டத்தில் பிரபாகரன் செய்த துரோகம்
[திங்கட்கிழமை,
17-09-2006, 09:10 GMT]
யாழ்ப்பாண அரசியல் தலைமைகளால் மிதவாத அரசியல் கோரிக்கையாகக் கருக்கொண்ட இந்த தமிழீழக் கோரிக்கை தீவிரவாதப் போராட்டமாக வடிவெடுத்து, அதன் பின் பயங்கரவாதப் போராட்டமாக இலங்கை அரசுக்கு எதிராக முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இவ்வாறு நடாத்தப்பட்டுக் கொண்டிருந்த இந்த தமிழீழத்துக்கான போராட்டத்தின் முதுகெலும்பாக கிழக்கு மக்களும் கிழக்குப் போராளிகளும்
«மேலும்»
தேசத்துரோகி பிரபாகரன் வழியிலும் பொட்டுவின் வழிகளியிலும் கிழக்கு மக்களை மரணப் படுகுழியில் தள்ளும் தேசத்துரோகி பானு
[திங்கட்கிழமை,
17-09-2006, 09:00 GMT]
இன்று கிழக்கில் பானு எனும் ஆக்கிரமிப்பாளனால் மக்களுக்கு வயது வேறுபாடின்றி ஆயுத முனையில் அச்சுறுத்தி சகலருக்கும் ஆயுதப் பயிற்சி வழங்கப்படுகின்றது. தனது குடும்பத்தை சுமக்கவென பாடுபட்டுக் கொண்டிருப்பவர்களால் எவ்வாறு போராட்டத்தில் ஈடுபட முடியும்? விரும்பிப் போராட்டத்தில் இணைவது வேறு, பிரச்சாரம் மூலம் இணைவது வேறு. ஆனால் தற்போது கருணா அம்மானின் பிரிவினால் ஆட்டம் கண்டு, பலவீனம் அடைந்துள்ள பிரபாகரன் கிழக்கில் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள தனது கைக்கூலி பானு மூலம் ஆக்கிரமிப்புச் சிந்தனையுடனான ஆட்சேர்ப்பு இடம் பெற்று வருகின்றது. பானுவின் ஆக்கிரமிப்புக்கு மேலும் வலுச் சேர்க்கும்
«மேலும்»
சுதந்திர கிழக்கு நோக்கி முதல் 41 நாட்கள்
[திங்கட்கிழமை,
17-09-2006, 00:10 GMT]
இலங்கையின் ஒன்பது மாகாண நிர்வாக பிரிப்புகளில் ஒன்றே கிழக்கு மாகாணம் ஆகும். இங்கு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களை மையமாக இருத்தி உருவாகியுள்ள கிளர்ச்சியானது விரிவடைந்து வருகிறது. இது 1948 இல் இருந்து சுதந்திர இலங்கையின் பெயரிலும் கடந்த சுமார் (30)முப்பது வருடகாலமாகதமிழீழத்தின் பெயரிலும்
«மேலும்»
கிழக்கு பல்கலைக்கழகத்தினுள் மலையக மாணவி மீது யாழ்மேலாதிக்கம் செய்த கொடுமை
[ஞாயிற்றுக்கிழமை,
27-08-2006, 09:15 GMT]
இது எப்படி இருக்கிறது. 18 பாசை தெரிந்த மனோ மாஸ்டருக்கு யாழ்மேலாதிக்கம் என்ற சொல் தெரியாதாம். தனது அதிகார வெறிக்காகவும் சுயநலத்திற்காகவும் பிரபா குழுவோடு இணைந்து கொண்டு கிழக்கு மக்களின் தன்மானத்தை யாழ் மேலாதிக்கத்திற்கு அடகுவைக்க துடிதுடிக்கும் திருகோணமலையைச் சேர்ந்த மனோமாஸ்டர் அவர்களே! உங்களை மூத்த தளபதி என்றும் 18 பாசை தெரிந்தவர் என்றும் ஏதோ பெரிதாக வர்ணிக்கின்றார்களே! ஆனால் உங்களுக்கு யாழ்மேலாதிக்கம் என்ற சொல்லை இவ்வளவு வயது முதிர்ந்தும் தெரியாது என்பதை நினைக்கும் போது தான் வேதனையாக இருக்கின்றது.
«மேலும்»
தமிழ் மக்களுக்கு தடுக்கப்பட்ட தீர்வுகள் திம்பு தொடக்கம் இன்றுவரை.
வரலாற்றுத் தொடர்... பாகம் ஒன்று
[ஞாயிற்றுக்கிழமை,
09-07-2006, 07:19 GMT]
தொடரில் நுழையும் முன் … இலங்கைத் தீவில் சிறுமைப்படுத்தப்பட்ட ஒரு சிறுபான்மைச் சமுதாயத்தின் உரிமைக் குரல் எழுதப்பட்டதிலிருந்து இன்றுவரை அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வந்துள்ளது. இலங்கை சுதந்திரம் பெற்று சிறுது காலத்தில் 1958ம் ஆண்டு தமிழ் மக்களின் மொழியுரிமை தடுக்கப்பட்டு உரிமைப் போராட்டம் கூர்மையடைய வழிவகுத்தது.
«மேலும்»
தோற்றுப்போன தனி ஈழக் கொள்கை. - பகுதி ஒன்று
[வெள்ளிக்கிழமை,
07-07-2006, 09:52 GMT]
தனி ஈழம் தமது உரிமைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் இதுதான் தீர்வு என அன்று தமிழ் மக்களின் எண்ண ஓட்டத்தில் உதித்ததில் தவறில்லை. மொழி, வாழ்வுரிமை, பாதுகாப்பு, கல்வி என்ற அனைத்து அடிப்படை விடயங்களிலும் சிங்களப் பேரினவாதம் முரண்டுபிடித்து தரமறுத்தமையினால். தம் உரிமைகளை வென்றெடுக்க தாம் பிரிந்து போவதுதான் ஒரே வழி என தமிழ் மக்கள் ஊட்டப்பட்டதும் தவறில்லை.
«மேலும்»
புலிகள் ராஜீவ்காந்தியினை கொலைசெய்தமை தமிழ்நாட்டு மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகமாகும். -அர்ச்சுனன்
[செவ்வாய்க்கிழமை,
04-07-2006, 14:09 GMT]
தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் இந்தியாவினை சாந்தப்படுத்துவதற்கு இந்திய தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வி புலிகளை வெட்கிக்க வைத்துள்ளது .லண்டனில் அவர் மாவீரர் உரை நிகழ்த்தும் போது விசில் அடித்து ஆரவாரப்படும் புலி ஆதரவாளர்கள் போல் இந்திய அரசும், தமிழக மக்களும் இருப்பார்கள் என அவர் நினைத்ததோடு தான் கூறிய கருத்துக்கள் ராஜதந்திர நகர்வுகளை ஏற்படுத்தும் என அவர் நம்பியது பரிதாபகரமாக முடிந்துள்ளது.
«மேலும்»
கனகம்புளியடி கொலைக்கும் அல்லைப்பிட்டி கொலைக்கு ஏது வித்தியாசம்: பச்சிளங்குழந்தைகளை பலி கொள்ளும் துர்ப்பாக்கிய சூழல்கள் - அர்ச்சுனன்
[செவ்வாய்க்கிழமை,
16-05-2006, 20:36 GMT]
நேற்று முன் தினம் இரவு 8 மணி 30 நிமிடம் அளவில் யாழ் தீவுப்பிரதேசமான மண்டைதிவில் உள்ள அல்லைப்பிட்டி பகுதியில் இரண்டு குழந்தைகள் உட்பட 9 அப்பாவி மக்கள் இனந்தெரியாத நபர்களினால் கொல்லப்பட்டிருந்தனர். கடற்படையினரின் முகாமிற்கு அண்மித்துள்ள இரண்டு மாடி வீட்டில் வசித்து வந்த தமிழ் மக்களே கொல்லப்பட்டுள்ளனர். கடற்படை முகாம் மீது பிரபா குழுவினர் குண்டுகளை வீசி விட்டு சென்றதின் பின்னர் இந்த கொடூர கொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. முகங்களை மறைத்தவண்ணம் வந்த கடற்படையினரே இந்த கொலைகளை புரிந்தாக புலிகளின் சார்பான ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அரச படையினர் இக்கொலையினை தாம் மேற்கொள்ளவில்லை என மறுத்துள்ளார்கள். இலங்கை அரசினால் இக் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது .அரச படையினை ஆத்திரமூட்டி தமிழ் மக்கள்மீது அவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ள வைப்பதே பிரபா குழுவினரின் தற்போதைய பிரதான நோக்கமாகும்.
«மேலும்»
|