செய்திகள்

அறிக்கைகள்

கட்டுரைகள்

நேர்காணல்கள்

தமிழ் அலை மாத இதழ்

 »தமிழ் அலை இணையத்தளத்தின் புதிய செயற்பாடுகள் பரீட்சிக்கப்படுகின்றது.
 
 »»» தமிழ் அலை «««   -

முந்தைய பதிப்புகள்

» அன்புடன் வாசகர்களுக்கு...
மீண்டும் மறு தமிழ் அலையின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

பாசிசஅச்சுறுத்தறுக்கும், இழப்புகளுக்கும் மத்தியில் எம்மிடமிருந்த குறுகிய வழங்களில் நிறைவுகள் கண்டு வெளிவந்த தமிழ் அலைக்கு எம் மக்களும், புலம் பெயர்ந்து வாழும் சகோதரர்களும் வழங்கிய ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் எம் இனிய நன்றிகள். அப்புத்துணர்ச்சியுடன் நாம் தமிழ் அலையை மாதமிரு மலர்களாக மாற்றுகின்றோம் என்ற நற் செய்தியை உங்களுடன் பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி,

2002ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று செல்லாக்காசாக மாறிவருகின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கை பிரபா குழுவிற்கான பாதுகாப்பு கவசமாகவே கருதப்படுகின்றது. இழப்புக்கள் ஏற்படுத்தி பிரபா குழுவினர் தமது நகர்வுகளை இனம் தெரியாத நபாகள்; எனும் போர்வையில் மேற்கொள்கின்றனர்.

இப்போது இராணுவத் தலைமையகத்தினுள் ஊடுருவி இராணுவத் தளபதி மீதே தற்கொலைத் தாககுதல் நடாத்தியுள்ளனர்.

இத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டில் பதற்றமான தன்மை நிலவுகின்றது. பிரபா குழுவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் உரிமை இராணுவத்தினருக்கு உண்டு. ஆனால் எப்பதிலடியாவது அப்பாவியான பொது மக்களை இலக்கு வைத்து அமையக்கூடாது.

பிரபா குழுவின் தாக்குதலைத் தொடர்ந்து படையினர் திருமலையில் மூதுர் பகுதியில் நடாத்திய தாக்குதலில் பல பொது மக்கள் கொல்லபபட்டளர். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது. படையினர் எதிரியின் இலக்குகளை இலக்கு வைக்கும் போது பொது மக்களுக்க எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தாக்குதல் நடாத்துவது மிக அவசியமாகும்.

இதே போன்று மக்களின் இன உணர்வுகளைக் கருதி இன வன்முறைகளைத் து}ண்டிவிட்டு குளிர்காய முனையும் சக்திகள் அரசியல், இராணுவ hPதியாக பெரும் பின்னடைவுகளைக் கொண்டுள்ள பிரபா குழு தற்போது இன வன்முறைகளை உண்டாக்கும் யுக்தியையே கையாழுகின்றது.

மீண்டும் மறு அலையில் சந்திப்போம்...


» மன்னராட்சிக்கு எதிராய் ஓங்கி ஒலிக்கும் மக்கள் குரல் நேபாளம்.

தற்சமயம் உலகின் முக்கியமான ஊடகங்களுக்கெல்லாம் தலைப்புச் செய்தி நேபாளம் தான். நேபாளத்தில்; அண்மைக்காலமாக மன்னராட்சிக்கு எதிராக சகல எதிர்க்கட்சியினரும், மாணவர்களும் மேற்கொண்டுவரும் தொடர்போராட்டங்களினாலும்,மக்களின் பகிஸ்கரிப்பு நடவடிக்கையாலும் முழு நேபாளமும் ஸ்தம்பித்துள்ளது.

தற்போது நேபாளத்தில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு மக்களின் போராட்டம் அடக்கப்பட்டு வருகின்றன. மக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களை கலைக்க நேபாள பொலிஸாரும், இராணுவமும் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் இதுவரை சுமார்46ற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போதும் கூட நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது.

நேபாள மன்னராட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்துள்ளது ஏன்? தற்போதைய மன்னரை மக்கள் வெறுப்பது என்ன காரணங்களால்,

நேபாளம் உலகிலுள்ள ஒரேயொரு இந்து சாம்ராஜ்ஜியமாகும் மிகச் சிறிய இந்நாடு வறுமையின் பிடியில் உள்ளது.நிலமற்ற ஏழை விவசாயிகள் அதிகமுள்ள நேபாளத்தில் அன்று தொட்டு இன்று வரை அதிகாரமிக்க மன்னராட்சியே நிலவுகின்றது. அங்குள்ள பெரும்பாலான ஏழை, படிப்பறிவற்ற பாமர மக்களால் மன்னர்கடவுளின் அவதாரமாக கருதப்படுகின்றார்.

கடவுளின் அவதாரமாக கருதப்படும் மன்னரை து}க்கியெறிய மக்கள் புறப்பட்டது ஏன்? சார்க் எனப்படும் தெற்காசியப் பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள நேபாளம் தமது எல்லைகளை இந்தியா, சீனா போன்ற வல்லரசுகளுடன் கொண்டுள்ளது.

நேபாளத்தில் அண்மைக்கால மக்கள் கிளர்ச்சியை அடக்க மன்னர் கயேனேந்திரா கைக்கொண்ட முறையையும் கட்சிகளைத் தடை செய்தமையையும் ஐ.நா செயலாளர் நாயகம் கொபி அனான் இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் கண்டித்துள்ளன. நிலைமை கைமீறிப் போனதால் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது விசேட பிரதிநிதியொருவரை உடனடியாக நேபாளம் அனுப்பியுள்ளார்.

மன்னருக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி ஒருபுறம் நடக்க மறுபுறம் நேபாள மாவோ கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களும் அதிகரித்துள்ளன. இதனால் நாட்டில் ஸ்திரமற்ற நிலைமை தோன்றியிருக்கின்றது. இதன் தாக்கம் தங்கள் நாட்டிலும் பிரதிபலிக்குமோ என அயல் வல்வரசுகள் அஞ்சுகின்றன.

20ம் நுற்றாண்டின் இறுதிக் காலம் வரை நேபாளம் தனி மன்னராட்சி நாடாக விளங்கியது. அனைத்து அதிகாரங்களும் மன்னரிடமே குவிந்து கிடந்தன. மன்னர் வைத்ததுதான் சட்டம் சொல்லுவதுதான் வேத வாக்கு எனும் நிலைமை. மன்னர்களின் சுகபோக வாழ்க்கையினாலும் சர்வதிகார அடக்கு முறையாலும் நாடு வறுமையில் உழன்றது.

நாட்டின் முழு நிலப்பகுதியும் அரச குடும்பத்தினருக்கே சொந்தம் என்பதனால் நிலமற்ற ஏழை விவசாயிகளின் நாடான நேபாளம். கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி போன்றவற்றில் முன்னேற வேண்டுமென்றால் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும் எனும் கூற்று மக்களிடையே வலுப்பெற அரம்பித்தது.

இதனால் 1950ம் ஆண்டளவில் மன்னராட்சிக்கும், அரச பரம்பரைக்கும் எதிராக மன்னர் எதிர்ப்புப்படை(யவெi சயயெ கழசஉந) இந்தியாவில் உருவானது. இப்படை இந்தியாவில் இருந்து கொண்டு நேபாள மன்னராட்சிக்கு எதிராக செயற்பட்டு நேபாள மக்களை மன்னராட்சிக்கு எதிராக து}ண்டினர்.இந்தியாவின் மறைமுக ஆதரவுடன் மக்கள் எழுச்சிப் போராட்டம் வலுவடைந்ததால் 1963ம் ஆண்டு நேபாளத்தில் பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்தைவிட மன்னரிடமே அதிகாரங்கள் குவிந்து காணப்பட்டன.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை மன்னர் விரும்பியநேரத்தில் கலைக்கலாம், பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை ஏற்றுக்கொள்ளாமை போன்ற மன்னரின் அதிகாரங்கள் நேபாள பாராளுமன்ற அதிகாரத்தை கேள்விக் குறியாக்கியது.

இவ்வாறான நிலையில் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு நிலவுடமை வழங்க வேண்டும் எனக் கோரியும்,மன்னராட்சியை இல்லாது ஒழிக்க வேண்டும் எனக் கோரியும் நேபாளத்தில் கிளர்ச்சி வெடிக்க ஆரம்பித்தன. இக்கிளர்ச்சியாளர்கள் நாங்கள் சீனப் பெருந் தலைவர் மாவோவின் சிந்தனையை சுமந்தவர்கள் என்பதனால் தம்மை மாவோயிஸ்டுக்கள் என அழைத்தனர்.

மாவோ போராளிகளுக்கும், அரச படையினருக்கும் இடையே இடம் பெற்ற மோதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்டுக்கள் அப்பாவியான மக்களைக் கொல்லவும் தயங்கவில்லை. மாவோயிஸ்டுக்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டில் மக்களை அரச படையினரும் கொன்றனர்.

இவ்வாறான நிலையில் 1991ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நேபாள தேசிய காங்ரஸ் ஆட்சியில் அமர்ந்தது. அதன் தலைவர் கிரில்லால் பிரசாத் கொய்ராலா பிரதமரானார்.

2001ம் ஆண்டு இடம்பெற்ற பொது வேலை நிறுத்தத்தினால் முழு நேபாளமும் ஸ்தம்பிதமடைந்தது. நாட்டில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டு மன்னர் பிரேந்திராவினால் அரசு கலைக்கப்பட்டது. மன்னர் நேரடியாக ஆட்சிப் பெறுப்பை ஏற்றார்.

2001 ஜூன் மாதம் 01ம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட ஒரு நிகழ்வு உலகையே அதிர்ச்சிக்கள்ளாக்கியது. முடிக்குரிய இளவரசர் திவேந்திரா தனது காதல் விவகாரத்தை ஏற்றுக் கொள்ளாததினால் மன்னர் விரேந்திரா, ராணி ஐஸ்வரியா உள்ளிட்ட 9 அரச குடும்ப அங்கத்தவர்களை சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொன்றார்.

நேபாளத்தை மட்டுமன்றி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச் சோக நிகழ்வுக்குப் பின் மன்னர் விரேந்திராவின் சகோதரனான கயேந்திரா மன்னராக அரியணை ஏறினார். நேபாள அரச பரம்பரை மொத்தமாக கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னனியில் பலத்த சந்தேகங்கள் நிலவின. அவை இன்னும் மர்மமாகவே உள்ளன.

மன்னர் கயேந்திரா ஏனைய மன்னர்களை விட மோசமான முறையில் ஜனநாயக ஆட்சியை மிதிக்க ஆரம்பித்தார். தான் நினைத்த நேரத்தில் ஜனநாயக ஆட்சியைத் கலைக்கவும், தனக்கு வேண்டியவர்களை இடைக்கால பிரதமர்களாக நியமித்தார். பின்னர் கருத்து முறன்பாடு தோன்ற அனைவரையும் சிறையிலடைத்தார்.

மன்னரினால் ஜனநாயக ஆட்சி கேலிக்கூத்தாக்கப்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றினைந்து மன்னருக்கெதிராகப் போராட ஆரம்பித்தனர். மன்னர்அவசர காலநிலையை பிரகடனப்படுத்தி போராட்டங்களை நசுக்க முற்பட்டார். இதுவே இன்றைய நேபாள பிரச்சினையின் வித்தானது.

மக்களின் போராட்டம் மிக வலுவடைந்ததினால் பிராந்திய அமைதியும் சீர்குலையும் என்ற அச்சம் தோன்றியது. இதனால் பிரச்சினைக்கு உடனடியாக பல்கட்சி ஆட்சிக்கு மதிப்பளித்து ஜனநாயகத்திற்;கு இடம் கொடுக்க வேண்டும் என இந்தியா. ஐ.நா, அமெரிக்கா, பிரிட்டன் போன்றன மன்னருக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தன.மன்னர் ஜனநாயக ஆட்சிக்கு இடம் கொடுக்காவிட்டால் நேபாளத்திற்கான ஆயுத ஏற்றுமதி, பொருளாதார தடைகளை ஏற்படுத்த போவதாக மேற்படி நாடுகள் அறிவித்தன. மக்களின் எதிர்ப்பு நடவடிக்கையும் வலுவடைந்தது.

மன்னர் கயேந்திரா இறுதியாக 21.04.2006 அன்று மக்களுக்கு விடுத்த அறிவிப்பில் மக்களிடம் மீண்டும் அரசியல் அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதாக அறிவித்தார்.

ஆனாலும் மக்கள் மன்னரின் இவ்வறிவிப்பு போலியானது புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு மன்னரின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர். அரசியலமைப்புச் சபையே மக்கள் அரசாங்கத்தினை தெரிவு செய்வதற்கான ஆகக் குறைந்த வழிகாட்டி என்கின்றனர் மக்கள்.

தற்போது மன்னருக்கு மக்களிடம் அதிகாரங்களை ஒப்படைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றார் நேபாளத்திற்கான அமெரிக்க து}தர். இந்தியா நேபாள நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கின்றது. மன்னர் மக்களாட்சிக்கு மதிப்பளிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஆட்சியை மக்களிடம் ஒப்படைப்பதே நேபாள பிரச்சினைக்கு ஒரே தீர்வு.


» இராணுவத் தளபதியை இலக்கு தற்கொலைத் தாக்குதல் - 10 பேர் பலி, 27 பேர் படுகாயம். சர்வதேச சமூகம் கடும் கண்டனம்.

கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து பிரபா குழுவின் பெண் தற்கொலைக் குண்டுதாரி நடாத்திய தற்கொலைத் தாக்குதலில் இராணுவத்தினர் உட்பட 10பேர்; பலியானதுடன், இராணுவத் தளபதி உட்பட 27 பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த 25-04-2006 அன்று இராணுவத் தலைமையக இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இச் சம்பவம் இடம் பெற்றது. குறித்த தினம் இராணுவ அதிகாரிகளின் கர்ப்பிணி மனைவிமார்களின் கிளினிக் நடைபெறும் தினமாகையால் பெண் குண்டுதாரி கர்ப்பிணி வேடம் அணிந்து இராணுவத் தலைமையகத்தினுள் நுழைந்துள்ளார்.

இராணுவ வைத்தியசாலைக்கு அருகில் இருக்கும் இராணுவ அதிகாரிகளுக்கான உணவு விடுதிக்கு பகல் 1:30 மணியளவில் மதிய உணவுக்காக இராணுவத் தளபதி சென்ற வேளையே இத் தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

இத் தாக்குதலில் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மூவரும், நான்கு பொது மக்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இராணுவத் தளபதிக்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடல் நிலை தேறிவருகின்றார்.

கொழும்பு நகரில் பிரபா குழு நடாத்திய இத் தற்கொலைத் தாக்குதலினால் பெரும் பரபரப்பும், அச்சுறுத்தலும் ஏற்பட்டதுடன் இத் தாக்குதலை அமெரிக்கா, ஜரோப்பிய யூனியன், பிரிட்டன், இந்தியா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் வன்மையாக கண்டித்துள்ளது.


» நாங்கள் பிரபாகரனின் பாசிசப் பிடியில் இருந்து எங்களுடைய மக்களை விடுவிக்க எங்களை முன்னிறுத்தியுள்ளோம். - நேர்காணலின்போது தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா அம்மான்.

நாங்கள்; பிரபாகரனின் பாசீசப் பிடியில் இருந்து எங்களுடைய மக்களை விடுவிக்க எங்களை முன்னிறுத்தியுள்ளோம். மேலும் எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஆயுதங்களைப் பயன்படுத்துகின்றோம்.

பிரபா குழுவினர் ஜெனிவாவிற்கு போக மறுப்பதன் காரணம் அவர்களுக்கு சமாதானப் பேச்சுவார்த்தையில.. ஈடுபடுவதற்கு விருப்பம் இல்லாமையே, கிழக்கு தளபதிகளின் பயணத்திற்கு அவர்கள் வைக்கும் கோரிக்கை ஒரு வசதியான தந்திர நடவடிக்கை என அவர் பிரத்தியேக பேட்டியின்போது கூறினார். தான் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நீண்ட காலம் இருந்ததாகவும் 2002 ஆம் ஆண்டு மாசி மாதம் செய்யப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்கு சம்மதித்ததில் அவர்கள் கொண்டிருந்த எண்ணப்பாடுகளை தான் நன்கு அறிந்திருந்ததாகவும் அவர் கூறினார். அது ஓர் தற்காலிக இடைவேளைக்காக மட்டுமே.

அவர்கள் இலங்கை அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாத வேலைகளை செய்யும் படி கேட்டுக்கொள்ளுவதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை ஒரு நிற்பந்தமான நிலைக்கு உட்படுத்துகின்றனா.; . பாராளுமன்றப் பிரச்சினையும் அத்துடன் கிழக்கிலே எங்களுடைய பிரசன்னமும் தமிழ் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் ஆகும். அவர்கள் இதை தாங்களாகவே எதிர்கொள்ள வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

இதையே அவர்கள் காலம் சென்ற ரணசிங்க பிரேமதாசவிற்கும் செய்தார்கள். இந்திய அமைதி காக்கும் படையை விரட்டியடிப்பதற்கு பெரும்தொகையான பணத்தையும் ஆயுதத்தையும் ரணசிங்க பிரேமதாச விடமிருந்து பிடிங்கியெடுத்து இந்திய அமைதிகாக்கும் படையை விரட்டியடிப்பதற்கு அவரைப் பாவித்த பின் அவரையே கொலை செய்தனர். இதுதான் அவர்களுடைய கைதேர்ந்த வஞ்சகத்தந்திரம்.

அரசியல் நடவடிக்கைகளில் பிரதான தீர்மானத்தை எடுப்பது எப்பொழுதும் பிரபாகரனினதும் அத்துடன் அன்ரன் பாலசிங்கத்தின் கைகளிலேயே அருந்தது. இரண்டாவதாக கூறப்பட்டவர் தலைவரின் பலவீனத்தை நன்கு அறிந்து திறமையாக கையாண்டார். மாசி மாதம் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அவர் பொறுமையிழந்ததாக நான் கேள்விப்பட்டேன்.

ஆங்கிலம் பேசும் இலங்கைப் பிரதிநிதியுடன் அவரால் தனித்து நின்று சமாளிக்க முடியவில்லை. எனவும் கருணா அம்மான் கூறினார். பேட்டியின் முழு விபரம் வருமாறு.

கேள்வி : இலங்கை அரசாங்கத்திற்கும் பிரபா குழுவுக்கும் இடையேயான செயற்பாட்டில் ; பிரபா குழு உங்கள் அமைப்பிடம் இருந்து ஆயுதங்கள் கட்டாயம் களையப்பட வேண்டும் என்ற வற்புறுத்தலால் இடை நிறுத்தம் ஏற்பட்டுள்ளது இந்தப் பிடி பற்றி என்ன கூறுகின்றீர்கள்.

பதில் : பிரபா குழு அரசியல் hPதியாகவும் இராணுவ hPதியாகவும் ஒரு பாசிச அமைப்பு. நாங்கள் அவர்களுடைய சர்வாதிகார சட்டங்களை சட்டபூர்வ அதிகாரங்களால் எதிர்ப்பதால் அவர்கள் எங்களை அவர்களுக்கு அச்சுறுத்தலாகவே காண்கின்றனர். நாங்கள் ஓர் அரசியல் இராணுவ அமைப்பாகும். அத்துடன் நாங்கள் மக்களின் மனுக்களை செயற்படுத்தும் ஓர் இயக்கம். ஏனெனில் நாங்கள் பிரபா குழுவின் பாசீசப் பிடியில் இருந்து எங்களுடைய மக்களை விடுவிக்க எங்களை முன்னிறுத்தியுள்ளோம். எங்களுடைய நிலைப்பாடுயாதெனில் அரசாங்கம் எங்களிடமிருந்து ஆயுங்களை களைவதற்கு எப்பொழுதாவது உத்தேசிக்குமானால் அரசாங்கம் எங்களிடமிருந்தும் பிரபா குழுவிடமிருந்தும் களைவதற்கு சமமுயற்சி மேற்கொள்ள வேண்டும். போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திட்ட போது நாங்கள் பிரபா குழுவினுடனேயே இருந்தோம் அத்துடன் ஆயுதங்களைக் களையும் விடயத்தில் அரசாங்கம் எங்களுக்கோர் சட்டத்தையும் பிரபா குழுவுக்கோர் சட்டத்ததையும் வகுக்க முடியாது. நாங்கள் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவே ஆயுதங்களை ஏந்துகின்றோம்.

கேள்வி : அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உங்கள் உறுப்பினர்கள் இயங்குவதாக சொல்லப்படும் அறிக்கைகளுக்கு நீங்கள் என்ன பதில் கூறுகின்றீர்கள்? இது உண்மையா? இல்லாவிட்டால் நீங்கள் கட்டுப்பாடு அற்ற பகுதிகளில் மட்டும் இயங்குகின்றீர்களா?

விடை : நாங்கள் இலங்கைப் படைக்கு விரோதமானவர்கள் அல்ல அதனால் எங்களுக்கு கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடமாடுவதில் எந்த கஷ்டமும் இல்லை. நாங்கள் பொட்டனின் உளவாளிகளைக கண்காணிக்கின்றோம். அவர்கள் தான் விடுதலைப் புலிகளினுடைய கொலை ஸ்தாபனத்தின் கொலைகளை மேற்கொள்ளும் பகுதியினர்.

கேள்வி : அண்மையில் இலங்கைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு இலங்கை அரசாங்கத்திடம் சமர்பித்த அறிக்கையில் உங்களுடைய ஆட்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடமாடுவதை அவர்களுடைய அலுவலர்கள் கண்காணித்து உள்ளதாகவும் அத்துடன் உண்மையில் ஓர் எடுத்துக்காட்டாக அவர்கள் இந்தப் பகுதிகளில் நடமாடிய உங்களுடைய ஆட்கள் சிலரை ஆயுதத்துடன் எதேச்சையாக சந்தித்ததாகவும கூறியுள்ளார்களே?

பதில் : இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தங்களை பிரபா குழுக்களின் முகவர்களாக உறுதிப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். நாங்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கு அவர்கள் கட்டாயம் எங்களுடைய செய்திப் பிரசுரங்களையும் பேட்டிகளையும் வாசிக்க வேண்டும். அவர்கள் எங்களுடைய அரசியல் இராணுவ நோக்கங்களின் அஸ்திவாரத்தை இரகசியமான முறையில் அழிப்பதற்கு பிரபா குழுவுக்கு உதவி செய்வதுடன் அவர்களின் இத்தீய செயலுக்கு துணை நிற்கின்றார்கள்.

அவர்கள் பிரபா குழு ஆயுதங்களை ஏந்தி தங்களுக்கு எதிராக குரல் கொடுப்போரையும் இலங்கை இராணுவப்படைகளையும் கொலை செய்வதற்கு எதிராக இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? அவர்கள் என்ன செய்ய முயல்கின்றார்கள் என்பதைப் பாருங்கள். சித்திரை-03-2006 இல் வெளியான எங்களுடைய செய்திப் பிரசுரத்தில் நாங்கள் குறிப்பிட்டுள்ளதாவது பிரபா குழுவின் கிழக்குத் தளபதியான பாணுவும், இளம்பரிதியும், கரிகாலனும் 1990 களில் வட-கிழக்குப் பகுதிகளில் இருந்து 85000 முஸ்லிம் மக்களை விரட்டிய குற்ற செயலில் பங்கு வகுத்த குற்றவாளிகள். நாங்கள் இவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிற்பாட்டுவதற்கு முயற்ச்சிப்போம்.

கேள்வி: ஆயுதப் படைகளிடம் இருந்து மறைமுகமான ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயமாக உங்களுடைய உறுப்பினர்கள் தப்பித்துக்கொள்ள முடியாது அல்லாவிட்டால் நீங்கள் இரண்டு பக்கங்களிலும் உள்ள கண்ணிகளுக்குள் சிக்கி கொள்வீர்கள்?

பதில்: முற்றிலும் இல்லை. நாங்கள் இலங்கை அரசாங்கப் படைகளுக்கு விரோதமானவர்கள் அல்ல. இது இராணுவப் படையிடம் இருந்து மறைமுக ஆதரவு கிடைக்கிறது என பொருள் கொள்ளமுடியாது. உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தான் எங்களுடைய கண்ணுக்கும்,இராணுவத்தின் கண்ணுக்கும் அகப்பட்டுள்ளார்கள். தமது பாசிச சர்வதிகாரத்தை விரிவாக்குவதற்காக இந்நிலையை மாற்றுவதற்கு முயற்சி செய்கின்றார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு நன்றி கெட்ட குழு. தமது எதிரிகளிடம் இருந்து ஆயுதங்களை பிடுங்கிக்கொள்வதற்கு அரசாங்க இராணுவ உதவியை நாடும் அதேவேளை தினமும் படையுறுப்பினர்களை கொலை செய்வதன் மூலம் ஒரு வெறுக்கத்தக்க கேவலமான பங்கையாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.

தொடரும்......


» சுதந்திரக் கிழக்கு நோக்கி - வரலாற்றுத் தொடர் அங்கம்- 01.

இலங்கையின் ஒன்பது மாகாண நிர்வாக பிரிப்புகளில் ஒன்றே கிழக்கு மாகாணம் ஆகும். இங்கு மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களை மையமாக இருத்தி உருவாகியுள்ள கிளர்ச்சியானது விரிவடைந்து வருகிறது. இது 1948 இல் இருந்து சுதந்திர இலங்கையின் பெயரிலும் கடந்த சுமார் (30) முப்பது வருடகாலமாகதமிழீழத்தின் பெயரிலும் கிழக்கிலங்கை மக்கள் இழந்து வந்திருக்கும் அடிப்படை மானிட உரிமைகளையும், ஜனநாயக சகவாழ்வையும் மீட்டெடுப்பதற்கான ஒரு வலுவான கோரிக்கையை அடிப்படையாக கொண்டது. ஆகவே இன மேலாதிக்க அரசிடமிருந்தும் பிரதேச மேலாதிக்க தமிழ்த் தலைமைகளிடமிருந்தும்hhhhhhர் ஜனநாயகத்தை மீட்பதற்கான ஒரு போராட்டமான இக்கிளர்ச்சியை நாம் ஒரு முகப்பட்டு வரவேற்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும், பங்களிக்க வேண்டும் ஒவ்வொரு மனிதனும் தனது பிரசவத்திலிருந்தே இவ்வுலகில் சுதந்திரமாக வாழ்வதற்கான உரித்துடையவன்.

இந்த வாழும் சுதந்திரத்தை நிலைநாட்டி கொள்வதற்காகவே கிழக்கு வாழ் பிரசைகள் இன்றைய சூழலில் போராட நிர்ப்பந்திக்கப்பட்டுளளார்கள். கிழக்கினது ப10ரண சுயாதிபத்தியத்தை கோரும் வகையில் விரிவடைய வேண்டிய நமது இந்த போராட்டம் எல்லா விடுதலை வேள்விகளையும் போலவே கரடு முரடான முள் பாதைகளினு}டு பயணிக்க வேண்டியுள்ளது. எனவே இப்படியானதொரு நெருக்கடியான சூழலில் நமது மாகாணத்தின் குடிமக்களாகிய நாம் நமது ப10ர்வீக மூதாதையர் கொண்டிருந்த சமூக நல்லிணக்கம், இன மத வேறுபாடுகளை கடந்த உழைக்கும் மக்களின் உறவுகள், போன்ற பாரம்பரிய முதுசொம்களை தேடி கண்டு பிடிக்க வேண்டும். அவற்றை து}சுதட்டி, புழுதிவிலக்கி, புதுசாக்கி, செப்பனிட்டு நமது கையகப்படுத்தி கொள்ள வேண்டும். இனவாத சேற்றில் மூழ்கி சிங்களவனென்றும், தமிழனென்றும், முஸ்லிமென்றும் கடந்த நு}ற்றாண்டில் நாம் கொண்ட காழ்ப்புகளை தாண்டி இந்த நு}ற்றாண்டில் புது மனிதர்களாக உருமாற வேண்டும். கடந்துவந்த அனுபவங்களை மறவாமலும் கிழக்கினது பல்லினங்கள் வாழும் சமூக யதார்த்தத்தை கணக்கிலெடுத்தும் நாம் எல்லோரும் ஒப்புரவாக வாழும் வண்ணம் நமது கிழக்கிற்கான ஒரு பலமான அரசியலை

01) அறிமுகம்

அரசியல் சூழல் பற்றிய பொதுநோக்கு பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்காகவே பிறக்கின்றான். ஆனால் இவ்வுலகில் எந்த ஒரு மனிதனும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாகவும் வாழமுடிகிறதா?மனிதனும் சகல உரிமைகளுடனும் சுதந்திரமாகவும் வாழமுடிகிறதா? வாழுகின்ற ஒவ்வொரு நொடிப்பொழுதும் வாழ்வதற்கான போராட்டங்களிலேயே அவனது காலம் கழிகின்றதே? அதனால்தான் இந்த மனித குலத்தின் வரலாறு என்பதே போராட்டங்களின் வரலாறாக புரட்சிகளின் வரலாறாக நிரம்பிக் கிடக்கிறது. உலகின் வரலாற்றினுடைய ஒவ்வொரு போராட்டமும், ஒவ்வொரு புரட்சியும் தமக்கான சுதந்திரத்தை கொண்டுவரும் என்று எல்லா மனிதர்களும் காலம் காலமாக நம்பிக்கிடக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றப்படுவது மட்டுமே நடந்துவருகிறது. அதேவேளை விடுதலையை கொண்டுவருவதாக வீறு கொண்டு எழுபவர்கள் அதிகாரங்கள் தம்மிடம் வந்ததும் அவரவர்களே புதிய எசமானர்களாகவும் வலம் வரத் தொடங்குகிறார்கள். ஆனாலும் அவர்களின் புதிய அரியாசனங்களும் மக்களின் கோபகனலிலிருந்து தப்பமுடியாது போகும் என்பதையும் வரலாறுகள் நமக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கின்றன. நமது நாட்டின் கடந்த நு}ற்றாண்டின் இறுதிதசாப்தங்கள் மிக மோசமான முறையில் இனவாதம் கோலோச்சும் நாடாக இலங்கையை அடையாளப்படுத்தி வந்திருக்கின்றன. இலங்கை அரசினது பேரினவாத போக்கும் தமிழர்தம் தேசியவாத போக்கும் ஜனநாயக உரிமைகளை குழிதோண்டி புதைப்பதில் ஒன்றிலிருந்து ஒன்று சளைத்தவை அல்ல என்பதை நிரூபித்திருக்கின்றன. பெரும்பான்மை சிங்கள அரசு சிறுபான்மைத் தமிழர்களை ஓரவஞ்சகமாக நடத்துகிறது என்பதற்காக உரிமைக்குரல் எழுப்பிய தமிழர்தம் தேசியவாதம் ஆயுதபோராட்டத்தை முன்மொழிந்தது. தமிழ்பேசும் இருவேறு மாகாணங்களாய் இருந்த வடக்கும் கிழக்கும் இணைந்து இந்த ஆயுதபோராட்டத்தை நடாத்தியும் வந்தன. இந்த ஆயுத போராட்டத்தின் களபலிகளின் தொடக்கமாக கருதக்கூடியது 1974.06.05 எனும் நாள். இலங்கை அரச படைகளிடம் பிடிபடகூடாது என்பதற்காக உரும்பிராய் பொன்.சிவகுமாரன் எனும் இளைஞன் தானே தன்னுயிரை மாய்த்துக்கொண்ட அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அன்று ஆரம்பித்த இழப்பு ஆனது ஏறக்குறைய போராளிகளாக 27000 இளம் உயிர்களையும் பொதுமக்கள் 70000 பேருமாக தமிழர் தரப்பில் மட்டும் மொத்தம் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோரை பலிகொண்டுள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகால ஆயுத போராட்டத்தில் மிக முக்கியமான இராணுவ பலம் வாய்ந்த அமைப்புத்தான் தமிழீழ விடுதலை புலிகள். இந்த இயக்கத்தினது இராணுவ தந்திரோபாயங்களின்தததததத் முதுகெலும்பாகவும், அமைப்பின் இரண்டாம் தலைமையாகவும் இருபத்தியொரு வருடகாலம் களத்தில் நின்றவர் தான் கேர்ணல் கருணா அம்;மான் என அழைக்கப்படும் முரளிதரன் ஆகும். இவர் 2004.03.02 ம் திகதி எடுத்த பாரிய முடிவானது முழுமொத்த போராட்டத்தையே ஒரு உலுப்பு உலுக்க