Bhagavad Gita chapter 1 verse 11 – இந்த பதிவில் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 11 பொருளுரையுடன் கொடுத்துள்ளோம்.
Bhagavad Gita Chapter 1 Verse 11
படை அணிவகுப்பின் நுழைவாயிலில் தத்தமது போர் முனைகளில் இருந்தபடியே நீங்கள் அனைவரும் பாட்டனார் பீஷ்மருக்கு முழுப் பாதுகாப்பளிக்க வேண்டும்.
Bhagavad Gita Chapter 1 verse 11 meaning – பொருளுரை
பீஷ்மரது ஆற்றலைப் புகழ்ந்த துரியோதனன். மற்றவர்கள் தங்களுக்குக் குறைவான முக்கியத்துவமளிக்கப்பட்டதாக எண்ணிவிடுவார்களோ என்று நினைத்து, தமது வழக்கமான ராஜதந்திர பாணியில் மேற்கண்டவாறு கூறி நிலைமையைச் சரிகட்ட முயல்கிறான்.
பீஷ்மர் ஐயமின்றி மாபெரும் போர் வீரரே, ஆனாலும் அவரது முதுமையைக் கருதி, எல்லாக் கோணங்களிலிருந்தும் அவரது பாதுகாப்பை ஒவ்வொருவரும் நினைக்க வேண்டுமென்பதை துரியோதனன் வலியுறுத்தினான்.
அவர் களத்தில் இறங்கி ஒரேபுறத்தில் போரிடுவதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டு விடலாமல்லவா? எனவே, மற்ற மாவீரர்கள் தங்களது இடத்தை விட்டு நகர்ந்து, வியூகத்தை எதிரிகள் உடைக்க வழிவிடக் கூடாதென்று அவன் எச்சரித்தான். குரு வம்சத்தினரின் வெற்றி பீஷ்ம தேவரையே சார்ந்திருக்கிறது என்பதை அவன் ஐயமற உணர்ந்திருந்தான்.
பற்பல பெருந்தலைவர்கள் கூடியிருந்த சபையில், அர்ஜுனனின் மனைவியான திரெளபதி. உடைகளைக் களைந்து நிர்வாணமாகும்படி பலவந்தப்படுத்தப்பட்டாள். அப்போது ஆதரவற்ற நிலையில் பீஷ்மரிடமும், துரோணரிடமும் நீதிக்காகமுறையிட்டபோது அவர்கள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் இருந்தனர்.
எனவே, போரில் அவர்களது முழு ஒத்துழைப்பைப் பற்றி துரியோதனனுக்கு மிகுந்த நம்பிக்கை யிருந்தது. இவ்விரு போர்த் தலைவர்களும், பாண்டவர்களிடம் பாசம் கொண்டவர்கள் என்பதை அவன் அறிந்திருந்தபோதிலும், சூதாட்டத்தின்போது நடந்து கொண்டதைப்போல, தற்போதும் அப்பாசத்தினை முற்றிலும் துறந்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறான்.
Chapter 1 verse 11 Explanation video in tamil
மேலும் இது போல சில பகவத்கீதையில் உள்ள பகுதி ஒன்றில் உள்ள சில மேற்கோள்களை பொருள் உரையுடன் கொடுத்துள்ளேன் படித்து மகிழுங்கள்.