Ghost story in Tamil – இந்தப் பதிவில் கதைகளை படிக்கும் நண்பர்களுக்காக நம் இணையதளத்தில் பேய் கதை பதிவை கொடுத்துள்ளேன் படித்து மகிழுங்கள்.
பேய் கதை – Ghost story in Tamil
சந்திப் மற்றும் ப்ரீத்தி தம்பதியினர் ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தனர் அவர்களுக்கு ராம் என்ற ஒரு பையனும் இருந்தான்.
இவர்கள் மூவரும் அவர்களின் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு சென்றனர். அதனால் இவர்கள் பழைய வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் புது வீட்டிற்கு மாற்றினர்.
அப்பொழுது புது வீட்டில் ஒரு அலமாரி இருப்பதை பார்த்த ராம் அவனின் தந்தையிடமும் அம்மாவிடமும் நம் வீட்டில் புதிதாக ஒரு அலமாரி ஏற்கனவே இருக்கிறது அது மிகவும் பெரிதாக இருக்கிறது என்று கூறினான். அந்த அலமாரி ஆனது ஸ்டோர் ரூமில் தான் இருக்கிறது என்றும் சொன்னான்.
இவனின் அம்மா சேதி அதனை நாளை பார்த்துக் கொள்ளலாம் நீ இப்பொழுது வந்து சாப்பிடு என்று கூறினாள். அப்பொழுது பிரீத்தி அம்மாவிடம் இருந்து போன் வந்தது அவர்கள் வீட்டிற்கு பூஜை செய்து விடுங்கள் என்று கூறினார் அதற்கு ப்ரீத்தி சரி நாளை அல்லது இந்த வாரத்திற்குள் நாங்கள் வீட்டிற்கு பூஜை செய்து விடுகிறோம் என்று கூறி போனை வைத்தாள்.
அதன் பின்பு மூவரும் தூங்கச் சென்றனர். மூவரும் தூங்கி கொண்டு இருக்கும் போது ராம் மட்டும் தானாகவே அலமாரி இருக்கும் ஸ்டோர் ரூமுக்கு சென்று நின்றான். அப்பொழுது திடீரென்று எழுந்து பார்த்த அவனின் அம்மா அவனை தூக்கத்திலிருந்து எழுப்பி நீ இங்கு என்ன செய்கிறாய் என்று கூறினாள்.
அதற்கு ராம் நான் எப்படி இங்கு வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை நான் தானாகவே இங்கு வந்துவிட்டேன் என்று பதிலளித்தான். சேரி நீ நிற்காதே என்று ராமை அம்மா தூங்குவதற்கு அழைத்துச் சென்றாள்.
ஆனாலும் அதன் பின்பு அடுத்த நாள் இரவில் ராமின் கழுத்தை சில பேய்கள் நிற்பதுபோல் இருக்கிறது என்று கூறினான். இதனை கேட்ட உடன் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் மிகவும் பயமாக ஆகிவிட்டது.
அதன் பின்பு உடனடியாக அந்த இரவிலே சென்று புரோகிதரை வீட்டிற்கு அழைத்து வந்து அந்த அலமாரியை காண்பித்தனர்.
புரோகிதர் அந்த அலமாரியை பார்த்தவுடன் இதில் சில ஆவிகள் இருக்கிறது என்று கூறினால் உடனடியாக நாளை காலை இல் இந்த அலமாரியை மந்திரத்தால் பூட்டுவதற்கு பூஜை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
ஆனால் அந்த இரவில் ஆவிகள் வீடு முழுவதும் அட்டகாசம் செய்து விட்டது இது என் வீடு நீங்கள் என்னை விட்டு விட்டுச் செல்லுங்கள் என்று அந்த வீட்டிலுள்ள மூவரையும் மிரட்டியது.
இதனை முன்பே கணித்த புரோகிதர் அவர் சென்ற சில மணிநேரங்களிலேயே திரும்பவும் வீட்டிற்கு வந்து அந்த அலமாரியை மந்திரத்தால் பூட்டுவதற்கு என்னென்ன பூஜைகள் செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தார்.
அப்பொழுது அந்த ஆவிகள் ஆவேசப் பட்டன ஆனா புரோகிதர் தனது மந்திரத்தால் அந்த ஆவிகளை சிரமப்பட்டு அலமாரிக்குள் அடைத்தார்.
அதன் பின்பு புரோகிதர் நீங்கள் இந்த வீட்டில் தங்குவது சரியாகாது உடனடியாக இந்த வீட்டை காலி செய்து மற்றொரு வீட்டிற்கு சென்று விடுங்கள் இந்த வீட்டில் நீங்கள் தங்குவது மூலம் உங்கள் மூவரில் ஒருவர் உயிர் ஆவது போகிவிடும் என்று எச்சரித்து விட்டு, வீட்டை விட்டு அவர் கிளம்பினார்.
இதனை கேட்டவுடன் மூவருக்கும் மிகவும் பயமாக ஆகிவிட்டது உடனடியாக அந்த வீட்டை விட்டு இரவோடு இரவாக கிளம்பி தனது கிராமத்தில் உள்ள பழைய வீட்டிற்கு சென்றனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ஊர்மக்கள் அந்த வீட்டை யாரும் வாங்கவில்லை மற்றும் இந்த வீட்டின் அருகில் செல்வதற்கு மிகவும் அச்சம் பட்டனர்.
இந்த வீட்டிலிருந்து இரவு முழுவதும் ஆவிகள் அலறும் சத்தங்கள் கேட்கும் அதனால் இந்த வீட்டில் அருகில் உள்ள சில வீடுகளையும் மக்கள் காலி செய்து இந்த வீட்டை விட்டுத் தொலைவில் சென்றனர்.
என்னதான் மந்திரத்தால் அந்த ஆவிகளை அலமாரியில் கட்டிப் போட்டாலும் என்றாவது ஒரு நாள் அது வெளி வந்து விடும் என்று அவ்வூர் மக்கள் அச்சத்தில் தான் இருக்கிறார்கள்.
Read also : Chapter 2 Verse 1, 3
இந்த கதையை உங்களுக்கு பிடித்திருந்தால் இதுபோல் கதைகளைப் படிக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்து விடுங்கள்.