Bhagavad Gita Chapter 1 Verse 12
பின்னர், குரு வம்சத்தின் மாபெரும் வீரரும், பாட்டனாருமான பீஷ்மர், தனது சங்கை சிங்க கர்ஜனை போன்று உரக்க ஊதி துரியோதனனுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தார்.
பொருளுரை
பேரனான துரியோதனனின் உள்மனதைப் புரிந்து கொண்ட குரு வம்சப் பெரியவரான பீஷ்மர் அவனிடம் தனக்குள்ள இயற்கையான பரிவினால், தனது சங்கை உரக்க முழங்கி (சிங்கம் போன்ற தனது நிலைக்குத் தகுந்தாற் போல). அவனுக்கு மகிழ்ச்சியூட்ட முயன்றார்.
மேலும், பரம புருஷ பகவானான கிருஷ்ணர் எதிர்தரப்பில் இருந்ததால், போரில் துரியோதனன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பேதுமில்லை என்பதை சங்கொலி மூலம் மறைமுகமாக, பரிதாபத்திற்குரிய தனது பேரனுக்கு உணர்த்தினார்.
இருப்பினும், போர் புரிவது தனது கடமை என்பதால், அதற்காக எல்லாவித துயரத்தையும் ஏற்கத் துணிந்தவர் பீஷ்மர்.
Bhagavad Gita Chapter 1 Verse 14
மறுதரப்பில், வெள்ளைக் குதிரைகள் பூட்டிய மிகச்சிறந்த ரதத்தில் அமர்ந்திருந்த பகவான் கிருஷ்ணரும், அர்ஜுனனும் தங்களது தெய்வீக சங்குகளை முழங்கினர்.
பொருளுரை
பீஷ்மதேவரால் ஒலிக்கப்பட்ட சங்குடன் ஒப்பிடுகையில், ஸ்ரீ கிருஷ்ண அர்ஜுனர்களின் கைகளிலிருந்த சங்குகள் திவ்யமானவை என வர்ணிக்கப்படுகின்றன.
கிருஷ்ணர் பாண்டவர்களின் தரப்பிலிருந்ததால், எதிர்தரப்பினருக்கு வெற்றி கிடைக்குமென்ற நம்பிக்கைக்கு இடமேயில்லை என்பதை தெய்வீக சங்குகளின் முழக்கம் சுட்டிக்காட்டுகிறது. ஜயஸ்து பாண்டு5 புத்ராணாம் யேஷாம் பக்ஷே ஜனார்தன: பாண்டவர்களைப் போன்று, பசுவான் கிருஷ்ணரோடு எப்போதும் நல்லுறவு கொள்பவர்களுக்கே வெற்றி.
பகவான் எங்கிருந்தாலும் அங்கே செல்வத் திருமகளும் (இலட்சுமியும்) உள்ளார்; ஏனெனில், இலட்சுமி தன் நாயகனை விட்டு என்றும் பிரிந்து வாழ்வதில்லை. எனவே. பகவான் விஷ்ணுவின் (கிருஷ்ணரின் திவ்ய சங்கொலியின் முழக்கம்.
வெற்றியும் செல்வமும் அர்ஜுனனுக்காக காத்துக் கொண்டுள்ளன என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது. மேலும், இவ்விரு நண்பர்களும்அமர்ந்திருந்த ரதம் அக்னி தேவரால் பரிசளிக்கப்பட்டதாகும். மூவுலகில் எங்கு சென்றாலும் எல்லா திசைகளையும் வெல்லக்கூடிய ஆற்றலை அந்த ரதம் பெற்றிருந்தது.
Read also : Chapter 3 verse 1, 2