bhagat-gita4

Bhagavad Gita Chapter 1 Verse 15

Bhagavad Gita Chapter 1 Verse 15

Bhagavad Gita Chapter 1 Verse 15

 பசுவான் கிருஷ்ணர் பாஞ்சஜன்யம் எனும் தனது சங்கை முழங்கினார்; அர்ஜுனன் தேவதத்தம் எனும் சங்கையும், பெருந் தீனிக்காரனும் வீர தீர சாகசங்களைப் புரிபவனுமான பீமன் பௌண்ட்ரம் எனும் அச்சமூட்டும் சங்கையும் முழங்கினர்.

பொருளுரை:

பகவான் கிருஷ்ணர், இங்கு ரிஷிகேசர் என்றழைக்கப்படுகிறார்; ஏனெனில், அவரே அனைத்து புலன்களின் உரிமையாளராவார். உயிர்வாழிகள் கிருஷ்ணரின் அம்சம் என்பதால், அவர்களின் புலன்களும் கிருஷ்ணாது புலன்களின் அம்சங்களே.

 ஜீவாத்மாவிடம் புலன்கள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள இயலாத அருவவாதிகள். அவர்களை புலன்களற்றவர்களாக (அருவமான வர்களாக) வர்ணிப்பதற்கு எப்போதும் ஏக்கம் கொண்டுள்ளனர். எல்லா உயிர்வாழிகளின் இதயத்திலும் அமர்ந்துள்ள இறைவன் அவர்களின் புலன்களை வழிநடத்துகிறார்.

ஆனால் அவரது வழிகாட்டுதல். ஜீவனின் சரணாகதியைப் பொறுத்ததே. ஒரு தூய பக்தனின் விஷயத்தில், பகவானே அவனது புலன்களை நேரடியாகக் கட்டுப்படுத்துகிறார்.

இங்கே குருக்ஷேத்திர அர்ஜுனனின் தெய்வீகப் புலன்களை நேரடியாகக் கட்டுப்படுத்து யுத்தகளத்தில் வதால், அவர் ரிஷிகேசர் என்ற குறிப்பிட்ட பெயரால் இங்கு அழைக்கப்படுகிறார்.

 தனது பலதரப்பட்ட செயல்களுக்கேற்ப பகவானுக்கு பல்வேறு திருநாமங்கள் உண்டு. உதாரணமாக, மது என்னும் அரக்கனைக் கொன்றதால் அவருக்கு மதுசூதனர் என்றுபெயர்: புலன்களுக்கும் பசுக்களுக்கும் இன்பம் தருவதால் அவருக்கு கோவிந்தர் என்று பெயர்: வசுதேவரின் புதல்வனாகத் தோன்றியதால் அவருக்கு வாஸுதேவர் என்று பெயர்: தேவகியை அன்னையாக ஏற்றதால் அவருக்கு தேவகி-நந்தனர் என்று பெயர்: விருந்தாவனத்தில்.

 யசோதைக்கு தனது பால்ய லீலையின் பாக்கியத்தை அளித்ததால், அவருக்கு யசோத-நந்தனர் என்று பெயர்: நண்பனான அர்ஜுௗனுக்கு தேரோட்டியதால், பார்த்தசாரதி என்று பெயர். இதுபோல குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனனை வழிநடத்தியதால், ரிஷிகேசர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

இந்த ஸ்லோகத்தில். அர்ஜுனன், தனஞ்ஜயன் என்று அழைக்கப்படு கிறான். ஏனெனில், பல்வேறு யாகங்களைச் செய்வதற்குப் பணம் தேவைப்பட்டபோது, அவன் அதிகமான செல்வத்தைச் சேகரித்து தனது அண்ணனுக்கு உதவினான்.

 அதுபோலவே, பெருமளவில் உணவு உட்கொள்வது மட்டுமின்றி அரக்கனான இடும்பனைக் கொல்லுதல் போன்ற சாகசச் செயல்களைப் புரிவதால், பீமன், விருகோதரன் என்று அழைக்கப்படுகிறான்.

எனவே. பாண்டவர் தரப்பில் பகவானிலிருந்து தொடங்கி பல்வேறு வீரர்கள் முழங்கிய சங்கொலிகள். போர் வீரர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன். மறுதரப்பிலோ இதுபோன்ற சிறப்புகள் ஏதுமில்லை. பரம் வழிகாட்டியான பகவான் கிருஷ்ணரும் அவர்கள் பக்கமில்லை, செல்வத் திருமகளும் இல்லை.

எனவே, அவர்கள் தோல்வியடைவது முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. சங்கொலியின் முழக்கங்கள் இச்செய்தியையே தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.