krishna-arjuna-IJ21_l

Bhagavad Gita Chapter 1 Verse 21 22 With Meaning

பகவத் கீதையில் பகுதி ஒன்றில் உள்ள ஸ்லோகன் 21, 22 பொருளுடன் இந்த பதிவில் பதிவிட்டு உள்ளோம் உங்களுக்காக எனவே மறக்காமல் படித்துவிட்டு கீழே உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும்.

Bhagavad Gita Chapter 1 Verse 21

Bhagavad Gita Chapter 1 Verse 21 22

அர்ஜுனன் கூறினான்: வீழ்ச்சியடையாதவரே, போர் புரியும் ஆவலுடன் இங்கே கூடியுள்ளவர்களில், எவர்களோடு நான் இந்த மாபெரும் போரில் ஈடுபட வேண்டும் என்பதைப் பார்க்கும்படி, தயவுசெய்து எனது ரதத்தை இரு சேனைகளுக்கு மத்தியில் நிறுத்தவும்.

Bhagavad Gita chapter 1 verse 21 meaning – பொருளுரை:

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் என்றபோதிலும் தனது காரணமற்ற கருணையால் தன் தண்பனின் சேவையில் ஈடுபட்டிருந்தார். தனது பக்தர்களிடம் தனக்குள்ள பிரியத்தில் அவர் என்றுமே தவறுவதில்லை என்பதால், இங்கு அச்யுத (வீழ்ச்சியடையாதவர்) என்று அழைக்கப்படுகிறார்.

 தேரோட்டி என்ற நிலையில் அர்ஜுனனது ஆணைகளை அவர் நிறைவேற்றியாக வேண்டும் என்பதால். அவர் அதற்குத் தயங்கவில்லை. அவர் அச்யுத என்று அழைக்கப்படுகிறார். தனது பக்தனுக்காக தேரோட்டியின் நிலையை அவர் ஏற்றுக் கொண்டிருந்தாலும், அவரது உன்னத நிலைக்கு இழிவு ஏதும் ஏற்படவில்லை.

எல்லாச் சூழ்நிலைகளிலும் அவர் புருஷோத்தமரான முழுமுதற் கடவுள். புலன்களின் அதிபதியான ரிஷிகேசர். பகவானுக்கும் அவரது சேவகனுக்கும் இடையே உள்ள உறவு திவ்யமானதும் மிகச் சுவையானதுமாகும். சேவகன் எப்போதுமே பகவானுக்கு ஏதாவது சேவை செய்யக் காத்துக் கொண்டிருக்கிறான்.

பகவானோ பக்தனுக்கு சேவை செய்யும் வாய்ப்பை எப்போதும் எதிர்நோக்குகிறார். தான் மற்றவர்களுக்கு ஆணையிடும் நிலையில் இருப்பதைக் காட்டிலும், தனது தூய பக்தன் தனக்கு ஆணையிடும் நிலையை ஏற்றுக்கொள்வதில் பகவான் பேரின்பம் காண்கிறார்.

 அவரே எஜமானர் என்பதால், அனைவரும் அவரது ஆணைக்குக் கீழ்ப்பட்டவர்கள், அவருக்கு ஆணையிடுமளவிற்கு அவரைவிட உயர்நிலையில் எவரும் இல்லை. எந்தச் சூழ்நிலையிலும் வீழ்ச்சியடை யாதவர் என்றபோதிலும், தூய பக்தன் தனக்கு ஆணையிடுவதைக் காணும்போது திவ்யமான இன்பத்தை அனுபவிக்கின்றார்.

பகவானின் தூய பக்தனான அர்ஜுனன். தன் தாயாதிகளிடமும் சகோதரர்களிடமும் போர் புரிய விரும்பவில்லை. ஆனால் எவ்விதசமாதானத்திற்கும் இணங்காத துரியோதனனின் பிடிவாதத்தாலேயே அவன் போர்க்களத்திற்கு வர நேர்ந்தது.

 எனவே, போர்க்களத்தின் தலைவர்கள் யார் என்பதைக் காண அவன் பேராவல் கொண்டிருந்தான்.

போர்க்களத்தில் சமாதான முயற்சி என்ற கேள்விக்கே இடமில்லை என்றாலும், அவர்களை மீண்டும் பார்க்கவும், தேவையற்ற இந்தப் போரில் ஈடுபட அவர்கள் எந்த அளவுக்கு தயாராக இருந்தனர் என்பதைப் பார்க்கவும் அவன் விரும்புகிறான்.

Bhagavad Gita Chapter 1 Verse 22

கெட்ட புத்தியுடைய, திருதராஷ்டிரரின் மகனை மகிழ்விக்கும் விருப்பத்தோடு, இங்கு போர் புரிய வந்திருப்பவர்களை நான் பார்க்க வேண்டும்.

Bhagavad Gita Chapter 1 Verse 22 Meaning – பொருளுரை:

தனது தந்தை திருதராஷ்டிரருடன் கூட்டுச் சேர்ந்து. பாண்டவர்களின் அரசை சதித்திட்டங்களால் ஆக்கிரமிக்க துரியோதனன் விரும்பினான் என்பது அனைவரும் அறிந்த இரகசியமாகும். எனவே. துரியோதனன் தரப்பில் இணைந்தவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளாகவே இருக்க வேண்டும்.

 போர்க்களத்தில் போர் தொடங்குவதற்கு அத்தகையவர்கள் யார் என்பதை அர்ஜுனன் காண விரும்பினானே முன் தவிர, அவர்களோடு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் அவனுக்கு இல்லை.

கிருஷ்ணர் அருகில் அமர்ந்திருந்ததால் வெற்றியில் அர்ஜுனனுக்கு முழு நம்பிக்கை இருந்தது. இருப்பினும், தான் சந்திக்க உள்ள படையின் பலத்தை மதிப்பிடுவதற்காக அவர்களைக் காண விரும்பினான்.

Conclusion – முடிவுரை

மேலும் இதுபோன்ற பகவத்கீதை ஸ்லோகங்களை படிக்க நமது இணையதளத்தை பின்பற்றுதல் மற்றும் இந்த பதிவினை சமூக வலைத்தளத்தில் பகிருங்கள். சில பதிவுகள் கீழே உங்களுக்காக,

Verse 4,8,9,10

2 thoughts on “Bhagavad Gita Chapter 1 Verse 21 22 With Meaning

Leave a Reply

Your email address will not be published.