Bhagavad Gita Chapter 2 verse 1, 3 – பகவத் கீதை பகுதி இரண்டில் மற்றும் மூன்றில் உள்ள மேற்கோள் ஒன்றும் மூன்றும் இந்த பதிவில் கொடுத்துள்ளேன்.
Bhagavad Gita Chapter 2 verse 1
சஞ்ஜயன் கூறினான்: அர்ஜுனன், இரக்கத்தினால் மூழ்கி, மனம் பலவீனமடைந்து, கண்களில் கண்ணீர் மல்கிய நிலையில் இருப்பதைக் கண்ட மதுசூதனரான கிருஷ்ணர் பின்வருமாறு கூறினார்.
Verse 1 meaning – பொருளுரை
பௌதிக இரக்கம், கவலை, கண்ணீர் ஆகியவை, தன்னைப் (ஆத்மாவைப்) பற்றிய உண்மையை அறியாததன் அறிகுறிகளாகும். நித்தியமான ஆத்மாவிற்காக இரக்கம் கொள்வதே தன்னையுணர்வதாகும்.
இந்த ஸ்லோகத்தில் மதுஸூதன என்னும் சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பகவான் கிருஷ்ணர் மது எனும் அரக்கனைக் கொன்றவர். எனவே. தன் கடமையை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள தவறான கருத்து எனும் அரக்கனை அவர் கொல்ல வேண்டுமென அர்ஜுனன் விரும்பினான்.
எங்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பது எவருக்கும் தெரிவதில்லை. நீரில் மூழ்கும் மனிதனின் ஆடைக்காகப் பரிதாபப்படுவது அர்த்தமற்றதாகும். அறியாமைக் கடலில் விழுந்த மனிதனின் வெளிப்புற உடையைக் (ஸ்தூல உடலைக்) காப்பதால் மட்டும் அம்மனிதனைக் காப்பாற்றிவிட முடியாது. இதைத் தெரிந்துகொள்ளாமல், வெளிப்புற ஆடைக்காகக் கவலைப்படுபவன் சூத்திரன்.
அதாவது தேவையின்றி வருந்துபவன் என்று அழைக்கப்படுகிறான். அர்ஜுனன் ஒரு சத்திரியன், அவனிடம்இத்தகைய நடத்தை எதிர்பார்க்கப்படவில்லை. இருப்பினும், அறியாமையில் உள்ள மனிதனின் கவலையைப் போக்க பகவான் கிருஷ்ணரால் முடியும்.
இக்காரணத்திற்காகத்தான் அவர் பகவத் கீதையைப் பாடினார். உயர் அதிகாரியான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் விளக்கப்பட்டுள்ள இவ்வத்தியாயம், ஜடவுடல், ஆத்மா அடையும் முறையைக் கற்பிக்கின்றது. எவ்வித பலனின் மீதும் பற்றுதல் கொள்ளாமல், தன்னைப் பற்றிய உண்மையான கருத்தில் நிலைபெற்றிருப்பவனுக்கு இத்தகு தன்னுணர்வு சாத்தியமாகும்.
Bhagavad Gita Chapter 2 Verse 3
பிருதாவின் மகனே, இதுபோன்ற ஆண்மையற்ற நிலைக்கு இடம் கொடுக்காதே. இஃது உனக்கு பொருத்தமானதல்ல. இதுபோன்றஅற்பமான இதய பலவீனத்தைக் கைவிட்டு, எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே! எழுவாயாக.
Verse 2 meaning – பொருளுரை
அர்ஜுனன் இங்கு பிருதாவின் மகனே அழைக்கப்படுகிறான். பிருதா. கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் தங்கையாவார்.
எனவே, அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இரத்த சம்பந்தம் உள்ளது. சத்திரியனின் மகன் போர்புரிய மறுத்தால், அவன் பெயரளவு சத்திரியனே. பிராமணனின் மகன் கெட்ட வழியில் நடந்தால், அவன் பெயரளவு பிராமணனே.
இத்தகு சத்திரியர்களும் பிராமணர்களும், தமது தந்தையரின் உபயோகமற்ற மக்களே எனவே, அர்ஜுனன் சத்திரியரின் உபயோகமற்ற மகனாக ஆவதை கிருஷ்ணர் விரும்பவில்லை. அர்ஜுனன் கிருஷ்ணரின் மிக நெருங்கிய நண்பன்: மேலும், கிருஷ்ணரே தேரில் நேரடியாக அவனுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார்.
இதுபோன்ற வாய்ப்புகளுக் கிடையே அர்ஜுனன் போரைத் துறந்தால், அச்செயல் அவனது புகழைக் கெடுத்துவிடும். எனவே, அர்ஜுனனிடம் உள்ள இத்தகைய மனப்பான்மை. அவனுக்குப் பொருத்தமானதல்ல என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
பெரு மதிப்பிற்குரிய பீஷ்மரிடமும், உறவினர்களிடமும் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்ற மனப்பான்மையில், தான் போரைத் துறப்பதாக அர்ஜுனன் வாதிடலாம். ஆனால் அத்தகைய பெருந்தன்மையினை இதய பலவீனமாக கிருஷ்ணர் கருதுகிறார்.
Conclusion – முடிவுரை
இத்தகைய பொய்யான பெருந்தன்மை எவ்வித அதிகாரிகளாலும் ஏற்கப்படுவதில்லை. எனவே. ஸ்ரீ கிருஷ்ணரின் வழிகாட்டுதலின்கீழ் இதுபோன்ற பெருந்தன்மை அல்லது பெயரளவிலான அகிம்சையை அர்ஜுனனைப் போன்ற நபர்கள் துறந்தாக வேண்டும்.