gita-04

Bhagavad Gita Chapter 3 Verse 1, 2 with meaning

அனைவரதும் வாழ்க்கைக்கும் தேவைப்படும் செய்தியினை பகவத் கீதையில் உள்ளது அதை இந்த பதிவில் கொடுத்துள்ளேன்.

Bhagavad Gita Chapter 3 Verse 1

Bhagavad Gita Chapter 3 Verse 1, 2

அர்ஜுனன் கூறினான்: ஜனார்தனனே, கேசவனே, பலன்நோக்குச் செயல்களைவிட புத்தி சிறந்தது என்றால், கோரமான இப்போரில் தாங்கள் என்னை பலவந்தமாக ஈடுபடுத்துவது ஏன்?

Verse 1 meaning – பொருளுரை

முந்தைய அத்தியாயத்தில், ஜடத் துன்பம் என்னும் பெருங்கடலிலிருந்து தனது உற்ற நண்பனான அர்ஜுனனைக் காப்பாற்றுவதற்காக, புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர். ஆத்மாவின் இயற்கையைப் பற்றி மிக விளக்கமாக உரைத்தார்.

 புத்தி யோகம் அல்லது கிருஷ்ண உணர்வே தன்னுணர்விற்கான வழியாக சிபாரிசு செய்யப்பட்டது. சமயங்களில் கிருஷ்ண உணர்வானது செயலற்ற சில சோம்பல் நிலையாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.

அத்தகு தவறான எண்ணத்திலுள்ள சிலர். பகவான் கிருஷ்ணரின் திருநாமங்களை ஜபித்து. பூரண கிருஷ்ண உணர்வு நிலையை அடைவதற்காக தனிமையான இடத்திற்குச் செல்ல விரும்புகின்றனர். ஆனால் கிருஷ்ண உணர்வின் தத்துவத்தில் பயிற்சி பெறாது. தனிமையான இடத்தில் கிருஷ்ணரின் திருநாமங்களை ஜபிப்பது விரும்பத்தக்கதல்ல.

அத்தகைய தனிமையான இடத்தில், அறியாத அப்பாவி மக்களிடமிருந்து மலிவான மரியாதையை ஒருவன் பெறலாம். சுறுசுறுப்பான வாழ்விலிருந்து ஓய்வுபெற்று தனிமையான இடத்தில் தவங்களைச் செய்வதே புத்தி யோகம் (புத்தியைக் கொண்டு ஆன்மீக முன்னேற்றம் அடைதல்) எனப்படும் கிருஷ்ண உணர்வு என்று அர்ஜுனனும் தவறாக எண்ணினான்.

வேறுவிதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வினை சாக்காக வைத்து. போரிடுவதிலிருந்து சாமர்த்தியமாக தப்பிக்க விரும்பினான். ஆனால் நேர்மையான சீடனாக இருந்ததால். இந்த விஷயத்தை குருவிடம் சமர்ப்பித்து, தான் என்ன செய்ய வேண்டுமென்பதை அவரிடம் வினவுகிறான்.

அர்ஜுனனின் வினாவிற்கு விடையளிக்கும் விதத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் கர்ம யோகம் (கிருஷ்ண உணர்வில் செயல்படுதல்) என்பதை இந்த மூன்றாம் அத்தியாயத்தில் விளக்குகிறார்.

Bhagavad Gita Chapter 3 Verse 2

இரண்டு வழிகளை ஒன்று போலக் கூறும் உமது அறிவுரையால், எனது புத்தி பேதலிக்கின்றது. எனவே, எனக்கு மிகவும் நன்மையானது எது என்பதை முடிவாகக் கூறுவீராக.

Verse 2 meaning – பொருளுரை

பகவத் கீதைக்கு ஒரு முன்னுரையைப் போன்ற முந்தைய அத்தியாயத்தில், ஸாங்கிய யோகம், புத்தி யோகம், புத்தியைக் கொண்டு புலன்களை அடக்குதல், பலன் கருதாது செயல்படுதல், புதியவரின் நிலை முதலிய பல்வேறு பாதைகள் விளக்கப்பட்டன.

இவையனைத்தும் எவ்விதத் தெளிவான வரைமுறையுமின்றி கூறப்பட்டன. புரிந்துகொள்வதற்கும், செயல்படு வதற்கும், முறைப்படுத்தப்பட்ட ஒரு வழிமுறை அவசியமாகும். எனவே, குழப்புவதைப் போலத் தெரியும் இவ்விஷயங்களை.

பிழைகள் ஏதுமின்றி சாதாரண மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத் தெளிவுபடுத்த விரும்புகிறான் அர்ஜுனன். வார்த்தை ஜாலத்தால் அர்ஜுனனைக் குழப்ப வேண்டுமென்ற எண்ணம் கிருஷ்ணருக்குக் கிடையாது என்றபோதிலும்.

கிருஷ்ண உணர்வை எவ்வாறு பின்பற்றுவது (செயல்களைத் துறப்பதா அல்லது உற்சாகத்துடன் செயலாற்றுவதா) என்பதை அர்ஜுனனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

வேறுவிதமாகக் கூறினால், தனது வினாக்களின் மூலம், பகவத் கீதையின் இரகசியத்தைப் புரிந்து கொள்ள விரும்பும் எல்லா மாணவர்களுக்கும், கிருஷ்ண உணர்வின் பாதையைச் சீரமைத்துக் கொடுக்கிறான் அர்ஜுனன்.

Conclusion

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தெரியாதவர் தெரிந்தவர் என எல்லோருக்கும் பகிருங்கள். அப்பொழுதுதான் நாம் இந்த பதிவினை எல்லோரிடத்திலும் கொண்டு சேர முடியும் மற்றும் பகவத் கீதையின் மகிமை அனைவரும் அறிவார்கள்.

சேரி மற்றொன்று நல்ல பதிவில் சந்திப்போம் அது வரை நாமும் இணைய தளத்தில் உள்ள பழைய பதிவுகளை கீழே கொடுத்துள்ளேன் அதையும் படித்து விட்டு உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

Bhagavad Gita chapter 3 verse 9, 12

Leave a Reply

Your email address will not be published.