Bhagavad Gita Chapter 3 Verse 14 With Meaning

இந்தப் பதிவில் அத்தியாயம் மூன்றில் உள்ள மேற்கோள் 14 விரிவாக மற்றும் பொருளுரை உடன் காணப்போகிறோம். இது பகவத் கீதை படிக்கும் நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.


Bhagavad Gita Chapter 3 Verse 14

Bhagavad Gita Chapter 3 Verse 14


மழையால் தோற்றுவிக்கப்படும் தானியங்களால் எல்லா ஜீவன்களின் உடல்களும் வாழ்கின்றன. யாகத்தால் மழையும், விதிக்கப்பட்ட கடமைகளால் யாகமும் உண்டாக்கப்படுகின்றன.


Verse 14 meaning in Tamil - பொருளுரை:

பகவத் கீதையின் மிகச்சிறந்த கருத்துரையாளரான ஸ்ரீல பலதேவ வித்யாபூஷணர் கூறுகிறார்: யே இந்த்ராத் யங்க தயாவஸ்தி தம் யஜ்ஞம் ஸர்வேஷ் வரம் விஷ்ணும் அப்புயர்ச்ய தச்-சேஷம் அஷ்னந்தி தேன தத் தே,ஹ-யாத்ராம் ஸம்பாத,யந்தி, தே ஸந்த: ஸர்வேஷ்வரஸ்ய யஜ்ஞ-புருஷஸ்ய பக்தா: ஸர்வ கில்பிரஷைர் அனாதி5-கால-விவ்ருத்தைர் ஆத்மானுப வ ப்ரதிபந்த கைர் நிகி லை: பாபைர் விமுச்யந்தே. எல்லா யாகங்களையும் அனுபவிக்கும் நபர் அல்லது யஜ்ஞ-புருஷர் என்றுஅறியப்படும் முழுமுதற் கடவுளே எல்லா தேவர்களுக்கும் தலைவராவார்.


உடலின் அங்கங்கள் உடல் மொத்தத்திற்கும் சேவை செய்வதைப் போல தேவர்கள் அனைவரும் பகவானுக்கு சேவை செய்கின்றனர்.


இந்திரன், சந்திரன், வருணன் முதலிய தேவர்கள் உலக விவகாரங்களை நிர்வாகம் செய்வதற்காக இறைவனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளாவர். அவர்களை மகிழ்விப்பதற்காகவும், காற்று. ஒளி, நீர் முதலானவற்றை அவர்களிடமிருந்து பெற்று உணவு தானியங்களை உற்பத்தி செய்வதற்காகவும், வேதங்கள் யாகங்களை விதித்துள்ளன.


 பகவான் கிருஷ்ணரை வழிபடும்போது, அவரது வெவ்வேறு அங்கங்களான தேவர்களும் தானாகவே வழிபடப்படுகின்றனர்; எனவே, தேவர்களைத் தனியாக வழிபடும் அவசியம் ஏதுமில்லை. இதன் காரணத்தால், கிருஷ்ண உணர்வி லுள்ள பக்தர்கள். உணவை உட்கொள்கின்றனர்.


 இஃது கிருஷ்ணருக்குப் படைத்தபின் உடலை ஆன்மீகத்தில் வளப்படுத்துகின்றது. இத்தகு செயலால். உடலின் பழைய பாவு விளைவுகள் அழிவது மட்டுமின்றி, ஜட இயற்கையின் எல்லாக் களங்கங்களிலிருந்தும் பூரண பாதுகாப்பு ஏற்படுகிறது. 


தொற்று வியாதி வேகமாகப் பரவும்போது, தடுப்பு மருந்து உட்கொள்வதால்' ஒருவன் அதன் தாக்கத்திலிருந்து தப்ப முடிகிறது. அதுபோலவே பசுவான் விஷ்ணுவிற்கு அர்ப்பணம் செய்த உணவை நாம் உட்கொள்ளும்போது ஜட பாதிப்பை எதிர்ப்பதற்குத் தேவையான சக்தி கிடைக்கிறது. 


இதைப் பின்பற்றுபவர்கள் இறைவனின் பக்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். எனவே, கிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட உணவை மட்டுமே உண்ணும் கிருஷ்ண பக்தர், ஆன்மீகத் தன்னுணர்வின் முன்னேற்றப் பாதையில் தடங்கல்களாக உள்ள (முந்தைய) ஜட பாதிப்புகளை வெல்ல முடியும்.


மறு பக்கத்தில், இவ்வாறு செய்யாதவன் தனது பாவச் செயல்களின் அளவை அதிகரித்துக் கொண்டே சென்று. இவற்றின் விளைவுகளை அனுபவிப்பதற்காக நாய், பன்றி போன்ற உடல்களை மறு பிறவியில் அடைகின்றான்.


இப்பௌதிக உலகம் முழுக்க முழுக்க களங்கங்கள் நிறைந்தது. பகவான் விஷ்ணுவின் பிரசாதத்தை உட்கொண்டு எதிர்ப்பு சக்தியை வளர்த்தவர். இததாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறார். இம்முறையைப் பின்பற்றாதவரோ களங்கங்களுக்கு உட்படுத்தப்படுகிறார் தானியங்களும், காய்கறிகளுமே உணவுப் பொருட்களாகும்.


மனிதன் பலவிதமான தானியங்களையும், காய்கறிகளையும் பழங்களையும் உட்கொள்கிறான். மிருகங்களோ. புல். இலை, தானியக் கழிவுகள் மற்றும் காய்கறிக் கழிவுகள் முதலியவற்றை உண்கின்றன. மாமிசம் உண்ணும் பழக்கம் உடையவர்களும், மிருகங்களை உண்பதற்குத் தாவரங்களின் உற்பத்தியையே நம்பியிருக்க வேண்டும்.


எனவே, இறுதியில் பார்த்தால், நாம் மிகப்பெரிய தொழிற்சாலைகளை நம்பி வாழ்வதில்லை, விவசாய நிலத்தையே நம்பி வாழ்கிறோம். இத்தகு விவசாய உற்பத்தி, தேவையான அளவு மழையை நம்பியுள்ளது.


இந்த மழை, தேவர்களான இந்திரன், சூரியன். சந்திரன் போன்றவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. அவர்கள் அனைவரும் பகவானின் தொண்டர்களே. யாகங்களால் இறைவனை திருப்தி செய்ய முடியும்: எனவே. இவற்றைச் செய்யாதவன் பஞ்சத்தையே காண்பான்-இஃது இயற்கையின் நியதி.


எனவே, யாகங்கள் குறிப்பாக இந்த யுகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ஸங்கீர்த்தன யாகத்தை. நமது உணவுப் பற்றாக் குறையைத் தீர்ப்பதற்காகவாவது செய்தேயாக வேண்டும்.Conclusion

பகவத் கீதை அத்தியாயம் ஒன்றில் உள்ள சில மேற்கோள்களைக் கீழே கொடுத்துள்ளேன் அதையும் படித்து விட்டு சமூக வலைத்தளங்களிலும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

மேலும் உங்களுக்கு எந்த அத்தியாயத்தில் இருந்து என்னென்ன மேற்கோள்கள் வேண்டுமென்று கீழே உள்ள கருத்து பெட்டியில் கருத்து அளியுங்கள்.

Chapter 3 verse 1, 2

Bhagavad Gita chapter 3 verse 9, 12

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.