Bhagavad Gita Chapter 3 verse 3, 4

 Bhagavad Gita Chapter 3 verse 3

Bhagavad Gita Chapter 3 verse 3, 4


புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: பாவங்களற்ற அர்ஜுனனே, இருவகையான மனிதர்கள் தன்னுணர்விற்காக முயல்வதாக நான் முன்பே விளக்கினேன். சிலர் ஸாங்கிய தத்துவ சிந்தனைகளாலும், பிறர் பக்தித் தொண்டினாலும், தன்னுணர்வினை அடைய முயல்கின்றனர்.


பொருளுரை

 இரண்டாம் அத்தியாயத்தின் 39வது ஸ்லோகத்தில், ஸாங்கிய யோகம், கர்ம யோகம் (புத்தி யோகம்) ஆகிய இரண்டு வழிமுறைகளை இறைவன் விளக்கினார். இவற்றையே இங்கு மேலும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.


ஜடத்தின் இயற்கையையும் ஆன்மாவின் இயற்கையையும் ஆய்வு செய்யக்கூடிய வழிமுறை ஸாங்கிய யோகம் என்று அறியப்படுகிறது: ஆராய்ச்சியின் மூலம் பெறப்படும் ஞானம் மற்றும் தத்துவத்தின் அடிப்படையில், ஆழமாக சிந்தித்துப் புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு இம்முறை உரித்தானதாகும்.


மற்ற வகையினரோ இரண்டாம் அத்தியாயத்தின் 61வது ஸ்லோகத்தில் கூறியுள்ளபடி. கிருஷ்ண உணர்வில் செயலாற்றுகின்றனர்; மேலும், 39வது ஸ்லோகத்தில், புத்தி யோகம் எனப்படும் கிருஷ்ண உணர்வின் கொள்கைகளின்படி செயலாற்று வதால், செயல்களின் பந்தத்திலிருந்து விடுபடலாமென்று இறைவன் கூறியுள்ளார்.


 அதுமட்டுமின்றி, இம்முறையில் எவ்வித குற்றமும் இல்லை. இதே கொள்கை மேலும் தெளிவாக 61வது ஸ்லோகத்தில் விளக்கப்பட்டுள்ளது-புத்தி யோகம் என்றால் பரமனின் மீது (குறிப்பாக கிருஷ்ணரின் மீது) பூரணமாகச் சார்ந்திருப்பதாகும்.


 இவ்வழியில் எல்லாப் புலன்களையும் சுலபமாகக் கட்டுப்படுத்த முடியும். எனவே, இரண்டு யோகங்களும், மதத்தையும் தத்துவ ஞானத்தையும் போல ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.


 தத்துவமற்ற மதம் வெறும் மன எழுச்சியே. சில சமயங்களில் மத வெறியாகவும் அறியப்படுகிறது. மதமற்ற தத்துவம் வெறும் மன கற்பனையாகும். இரண்டின் இறுதி நோக்கமும் ஸ்ரீ கிருஷ்ணரே:


 ஏனெனில், பூரண உண்மையைத் தேடி அலையும் தத்துவ ஞானிகளும் இறுதியில், கிருஷ்ண உணர்வையே அடைகின்றனர் என்று பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது. பரமாத்மாவுடன் ஆத்மாவின் உண்மையான உறவு என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்காகவே மொத்த வழிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது.


தத்துவ சிந்தனையின் மூலம் படிப்படியாக கிருஷ்ண உணர்வினை அடைதல் மறைமுகமான வழிமுறையாகும். ஆனால் புத்தி யோகத்தின் மூலம் அனைத்தையும் கிருஷ்ணருடன் கிருஷ்ண உணர்வில் இணைத்தல் நேரடியான வழி முறையாகும்.


இவ்விரண்டு வழிகளில் கிருஷ்ண உணர்வு வழியே சிறந்தது; ஏனெனில், இது தத்துவப் பயிற்சிகளைச் சார்ந்து புலன்களைத் தூய்மைப்படுத்துவதில்லை, தொண்டு என்னும் நேர்வழி, சுலபமானதும் சிறந்ததுமாகும்.


Bhagavad Gita chapter 3 Verse 4

செயல்களிலிருந்து விலகிக்கொள்வதால் விளைவுகளிலிருந்து ஒருவன் விடுதலை பெற முடியாது. துறவால் மட்டும் பக்குவமடைதல் என்பதும் இயலாததாகும்.


பொருளுரை

லௌகீக மனிதனின் இதயத்தைத் தூய்மைப் படுத்துவதற்காகப் பல்வேறு கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன. இத்தகு கடமைகளைச் செய்து தூய்மையடைந்த பின்புதான் துறவு வாழ்வை மேற்கொள்ள முடியும்.


 தூய்மையடையாமல், திடீரென்று வாழ்வின் நான்காம் நிலையான சந்நியாசத்தை ஏற்றுக்கொள்வதால் யாரும் வெற்றி பெற்று விட முடியாது. பலன்நோக்குச் செயல்களி லிருந்து ஓய்வுபெற்று சந்நியாசத்தை ஏற்றுக்கொள்வதால், ஒருவன் நாராயணரின் நிலைக்கு உடனடியாக வந்து விடுவதாக ஸாங்கிய தத்துவவாதிகள் எண்ணுகின்றனர்.


 ஆனால் பகவான் கிருஷ்ணர் இக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதயம் தூய்மையடையாத நிலையில் ஏற்கப்படும் சந்நியாசம், சமூகத்திற்குத் தொல்லையையே ஏற்படுத்தும். அதே சமயத்தில், இறைவனுடைய திவ்யமான தொண்டில் ஈடுபடுபவன், தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றவில்லையெனினும், ஆன்மீகத்தில் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளானோ.


அந்த அளவிற்கு இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றான் (புத்தி யோகம்). ஸ்வல்பம்-அப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ படியாத். இத்தகு கொள்கையில் ஆற்றப்படும் மிகச்சிறிய செயலும், மாபெரும் கஷ்டங்களை வெற்றிகொள்ள உதவும்.


Chapter 3 verse 1, 2

Chapter 3 Verse 14

Bhagavad Gita chapter 3 verse 9, 12

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.