bhagat-gita4

Bhagavad Gita Chapter 3 Verse 6, 7 With Meaning

Bhagavad Gita Chapter 3 Verse 6, 7 – இந்தப் பதிவில் நீங்கள் பகுதி மூன்றில் உள்ள மேற்கு 6, 7 பகவத் கீதையில் உள்ளபடியே பொருள் உரையுடன் கொடுத்துள்ளேன்.

Bhagavad Gita Chapter 3 Verse 6

Bhagavad Gita Chapter 3 Verse 6, 7

புலன்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி, அதே சமயம் புலனின்பப் பொருட்களில் மனதை அலைபாய விடுபவன், தன்னையே முட்டாளாக்கிக்கொள்கிறான். அவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகின்றான்.

Verse 6 meaning in tamil – பொருளுரை

கிருஷ்ண உணர்வில் செயலாற்ற மறுத்து. தியானம் செய்வதாக நடித்துக் கொண்டு உண்மையில் மனதில் புலனின்பத்தைப் பற்றி எண்ணிக் கொண்டுள்ள போலிகள் பலர் உண்டு.

 தங்களைப் பின்பற்றும் வசதியான மக்களைத் தவறாக வழிநடத்துவதற்காக இத்தகைய போலிகள் சில நேரங்களில் வறட்டு தத்துவங்களைப் பேசுவதுண்டு. ஆனால் ஸ்லோகத்தில் அத்தகையவர்கள் மாபெரும் ஏமாற்றுக்காரர்களாக வர்ணிக்கப்படு கின்றனர்.

தனது தகுதிக்கேற்ற சமூக நிலையை ஏற்று, ஒருவன் புலனின்பத்தை அனுபவிக்கலாம். அவன் அந்நிலைக்குரிய சட்டதிட்டங்களை ஒழுங்காகப் பின்பற்றினால், தன்னைத் தூய்மைப் படுத்திக் கொண்டு படிப்படியாக முன்னேற வாய்ப்புள்ளது.

 ஆனால் மனதில் புலனுகர்ச்சிப் பொருட்களைத் தேடிக் கொண்டு. வெளியே யோகியாகப் போலி வேடம் போடுபவன். சில சமயங்களில் தத்துவங்களைப் பேசினாலும், மாபெரும் ஏமாற்றுக்காரனாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய மனிதனின் ஞானம் சற்றும் உபயோகமற்றது;

 ஏனெனில், அந்த பாவியின் ஞானம் இறைவனின் மயக்கும் சக்தியால் அடித்துக் கொண்டுச் ல்லப்படுகின்றது. இத்தகு போலியின் மனம் எப்போதும் களங்கம் நிறைந்திருப்பதால், அவனது தியான யோக நாடகங்களுக்கு எவ்வித நன்மதிப்புமில்லை.

Bhagavad Gita Chapter 3 Verse 7

அதே சமயத்தில், செயலாற்றும் புலன்களை மனதால் கட்டுப்படுத்தி, பற்றின்றி கர்ம யோகத்தில் (கிருஷ்ண உணர்வில்) செயல்படும் நேர்மையான மனிதன், மிக உயர்ந்தவனாவான்.

Verse 7 meaning in tamil – பொருளுரை

கட்டுப்பாடற்ற வாழ்க்கையையும், புலனின்பத்தையும் விரும்பக்கூடிய போலித் துறவியாக வாழ்வதைவிட, தனக்குரிய தொழிலைச் செய்த வண்ணம், பௌதிக பந்தத்திலிருந்து விடுபட்டு இறைவனின் திருநாட்டை அடைவது எனும் வாழ்வின் குறிக்கோளை நிறைவேற்றுதல் சிறந்ததாகும்.

சுயநலனின் முதன்மையான குறிக்கோள் (ஸ்வார்த, கxதி) விஷ்ணுவை அடைவதேயாகும். வர்ணாஷ்ரம முறையின் வர்ணங்களும், ஆஷ்ரமங்களும், வாழ்வின் இந்த நோக்கத்தை நாம் அடைவதற்காகவே அமைக்கப்பட்டுள்ளன. 

கிருஷ்ணருக்குச் சீரான முறையில் தொண்டு புரிவதன் மூலம், குடும்ப வாழ்வில் இருப்பவர்களும், இந்த இலட்சியத்தை அடையலாம். சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளபடி கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து, பற்றின்றி தனது தொழில்களைச் செய்வதன் மூலம், ஒருவன் தன்னுணர்வுப் பாதையில் முன்னேற்றத்தைக் காணலாம்.

 இம்முறையைப் பின்பற்றும் நேர்மையான நபர், ஆன்மீக வாழ்வு வாழ்வதாக படம் காட்டிக் கொண்டு அறியாத மக்களை ஏமாற்றும் போலிகளைவிட பன்மடங்கு சிறப்பான நிலையில் உள்ளார்.

 வெறும் வயிற்றுப் பிழைப்பிற்காக யோகம் செய்யக்கூடிய போலி யோகியைவிட, வீதியைத் துப்புரவு செய்யும் நேர்மையான சுத்திகரிப்புத் தொழிலாளி பன்மடங்கு மேலானவர்.

Explanation video for chapter 3 verse 6, 7

உங்களுக்காக அத்தியாயம் மூன்றில் உள்ள ஸ்லோகன் 6, 7 விரிவாக்கமாக யூடியூபில் பதிவிடப்பட்ட வீடியோக்களையும் தந்துள்ளேன் அதையும் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் பதிவுகள் உங்களுக்காக படிக்க காத்திருக்கிறது கீழே,

Chapter 3 Verse 14

Bhagavad Gita chapter 3 verse 9, 12

Leave a Reply

Your email address will not be published.