Bhagavad Gita chapter 3 Verse 9
விஷ்ணுவிற்கு அர்ப்பணமாக செய்யப்படும் செயல்கள் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். மற்ற செயல்கள் இந்த பௌதிகம் உலகத்தோடு பந்தப்படுத்துபவை. எனவே, குந்தியின் மகனே, உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை அவரது திருப்திக்காகச்செய் இவ்விதமாக நீ எப்போதும் பந்தத்திலிருந்து விடுபட்டு வாழ்வாய்,
Chapter 3 verse 9 meaning – பொருளுரை
வெறுமனே உடலைப் பேணுவதற்காகவாவது ஒருவன். செயலாற்ற வேண்டும் என்பதால், குறிப்பிட்ட சமூக நிலைக்கும் குணத்திற்கும் தகுந்தாற் போல. விதிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் குறிப்பிட்ட அனைவரும் கடமைகள். தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும். யஜ்ஞம் என்றால் பசுவான் விஷ்ணு என்றும், யாகச் சடங்குகள் என்றும் பொருள்படும்.
உண்மையில் எல்லா யாகச் சடங்குகளும் பகவான் விஷ்ணுவை திருப்தி செய்வதற்கானவையே. யஜ்ஞோ வை விஷ்ணு: என வேதங்கள் கூறுகின்றன. வேறுவிதமாகக் கூறினால், யாகங்களைச் செய்வதாலும் சரி. நேரடியாக பகவான் விஷ்ணுவிற்கு ஆன்மீகத் தொண்டு செய்வதாலும் சரி. ஒரே குறிக்கோள் நிறைவேற்றப்படு கின்றது.
இந்த ஸ்லோகத்தில் கூறியுள்ளபடி. கிருஷ்ண உணர்வு என்பது யாகங்களைச் செய்வதற்கு சமமானதாகும். வர்ணாஷ்ரம தர்மத்தின் நோக்கமும் பகவான் விஷ்ணுவை திருப்தி செய்வதே வர்ணாஷ்,ரமாசாரவதா புருஷேண பர: புமான்/ விஷ்ணூர் ஆராத்யதே (விஷ்ணு புராணம் 3.8.8).
எனவே, விஷ்ணுவின் திருப்திக்காக ஒருவன் செயலாற்ற வேண்டும். இதைத் தவிர செய்யப்படக்கூடிய மற்ற எல்லாச் செயல்களும் பந்தத்திற்கு காரணமாகவே அமையும். நல்ல, தீய செயல்கள் இரண்டுமே விளைவுகளைக் கொடுப்பவை, எத்தகு வினையும் செய்பவனை பந்தப்படுத்திவிடும்.
எனவே, கிருஷ்ணரை (அல்லது விஷ்ணுவை) திருப்திப்படுத்துவதற்காக கிருஷ்ண உணர்வோடு செயலாற்ற வேண்டும். அவ்வாறு செயல்களைச் செய்பவன் முக்தி பெற்ற நிலையில் இருக்கிறான். இதுவே செயலாற்றுவதிலுள்ள பெருங்கலையாகும்.
மேலும், இவ்வழிமுறையின் ஆரம்பத்தில் மிகச்சிறந்த வழிகாட்டுதல் தேவை. எனவே. கிருஷ்ண பக்தரின் திறமையான வழிகாட்டுதலின்படியோ, பகவான் கிருஷ்ணரின் நேரடி உபதேசத்தின்படியோ (அர்ஜுனனுக்குக் கிடைத்த வாய்ப்பைப் போல), கவனமாகச் செயலாற்ற வேண்டும்.
புலனுகர்ச்சிக்காக ஒன்றும் செய்யப்படக் கூடாது. அனைத்தும் பகவானுக்காகவே செய்யப்பட வேண்டும்.
இந்த வழிமுறை. செயல்களின் விளைவுகளிலிருந்து ஒருவனைப் பாதுகாப்பது மட்டுமின்றி, படிப்படியாக பகவானின் திவ்யமான அன்புத் தொண்டிற்கு அவனை உயர்த்துகிறது. அத்தகைய தொண்டினால் மட்டுமே ஒருவன் இறைவனின் திருநாட்டிற்கு உயர்வு பெற முடியும்.
Bhagavad Gita Chapter 3 Verse 12
பல்வேறு வாழ்க்கைத் தேவைகளின் அதிகாரிகளான தேவர்கள், யாகங்களால் திருப்தியடைந்து உங்களுக்கு வேண்டியவற்றை யெல்லாம் அளிக்கின்றனர். இத்தகு அன்பளிப்புகளை பதிலுக்கு அவர்களுக்குப் படைக்காமல் அனுபவிப்பவன் திருடனேயாவான். நிச்சயமாக
Chapter 3 verse 12 meaning – பொருளுரை
பரம புருஷ பகவானான விஷ்ணுவின் சார்பில் வாழ்க்கைத் தேவைகளை வழங்கும் அதிகாரிகளே தேவர்கள்.
எனவே, நியமிக்கப்பட்ட யாகங்களின் மூலம் அவர்கள் திருப்திப்படுத்தப்பட வேண்டும். வெவ்வேறு வகையான தேவர்களுக்கு வெவ்வேறு வகையான யாகங்கள் வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
ஆனால், இறுதியில் எல்லா யாகங்களும். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் விஷ்ணுவிற்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.
முழுமுதற் கடவுளைப் பற்றி புரிந்துகொள்ள முடியாதவர்களுக்கு, தேவர்களுக்கான யாகங்கள் விதிக்கப்பட்டுள்ளன. மக்களின் பலதரப்பட்ட குணங்களுக்கேற்ப பல்வேறு வகையான யாகங்கள் வேதங்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தேவர்களை வழிபடுவதும்கூட மனிதர்களின் வெவ்வேறு குணங்களுக்கு ஏற்பவே. உதாரணமாக. மாமிசம் உண்பவர்களுக்கு, இயற்கையின் கோரசக்தி உருவமான காளியை வழிபடுவதும்.
வழிபாட்டுத் தளத்தில் மிருகபலி கொடுப்பதும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஸத்வ குணத்தில் இருப்பவர்களுக்கு, விஷ்ணுவை வழிபடும் திவ்யமான முறை பரிந்துரைக்கப்படுகிறது.
ஆனால் மொத்தத்தில் எல்லா யாகங்களுமே படிப்படியாக திவ்ய நிலைக்கு ஏற்றம் பெறும் நோக்கத்துடன் ஏற்பட்டவையாகும். சாதாரண மக்களுக்கு, குறைந்தபட்சம் பஞ்ச-மஹா-யஜ்ஞம் எனப்படும் ஐந்து முக்கிய யாகங்கள் இன்றியமையாதவையாகும்.
மனித சமுதாயம் வாழ்வதற்குத் தேவையானவை அனைத்தும், இறைவனின் பிரதிநிதிகளான தேவர்களாலேயே அளிக்கப்படுகின்றன என்பதை அறிவது அவசியம். யாரும் எதையும் உண்டாக்க முடியாது.
உதாரணத்திற்கு மனித சமுதாயத்தின் உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள். ஸத்வ குணத்தில் உள்ளவர்களுக்கான தானியங்கள், பழங்கள், காய்கறிகள், பால், சர்க்கரை முதலியவை மட்டுமின்றி, அசைவ உணவு உண்பவர்களுக்கான புலால் உட்பட எதுவும் மனிதரால் படைக்கப்படுவது அல்ல.
மேலும், வெப்பம், ஒளி, நீர், காற்று போன்ற வாழ்க்கைத் தேவைகளும் மனித சமுதாயத்தால் படைக்கப்பட முடியாதவை. பரம் புருஷரான இறைவன் இல்லையெனில், வேண்டிய சூரிய ஒளி, மதியொளி, மழை, தென்றல் என எதுவுமே இருக்க முடியாது.
இவையின்றி மனிதன் வாழ இயலாது. நமது வாழ்வு இறைவனால் அளிக்கப்படும் பொருட்களை நம்பி இருப்பது மிகத் தெளிவு. நமது உற்பத்தித் தொழிற்சாலைகளுக்குத் தேவையான உலோகங்கள், கந்தகம். பாதரஸம், மாங்கனீஸ் மற்றும் பல எண்ணற்ற கச்சாப் பொருட்களும் கூட பகவானால் வழங்கப்படுவதேயாகும்.
ஜட வாழ்வின் போராட்டங்களிலிருந்து முக்தி பெறுவது என்னும் இறுதிக் குறிக்கோளுக்கு வழிவகுக்கும் தன்னுணர்வை அடைவதற்காக, இறைவனின் பிரதிநிதிகளால் விநியோகிக்கப்படும் பல்வேறு பொருட்களை சரிவர பயன்படுத்தி, நாம் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
வாழ்வின் குறிக்கோள் யாகங்களைச் செய்வதால் அடையப்படுகிறது. மனித வாழ்வின் குறிக்கோளை மறந்து, பசுவானின் பிரதிநிதிகளால் அளிக்கப்படும். பொருட்களை புலனுகர்ச்சிகளுக்காக (படைப்பின் குறிக்கோள் அதுவல்ல என்றபோதிலும்) ஏற்று, பௌதிகவாழ்வில் மேன்மேலும் சிக்கிக் கொண்டால், நிச்சயமாக நாம் திருடர்களாகிவிடுகிறோம்.
அதனால் பௌதிக இயற்கையின் சட்டத்தால் தண்டிக்கப்படுகிறோம். திருடர்களின் சமுதாயம் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது ஏனெனில், அவர்களது வாழ்வில் குறிக்கோள் எதுவுமில்லை.
பெளதிகத் திருடர்களின் வாழ்வில் எவ்வித இறுதிக் குறிக்கோளும் கிடையாது. யாகங்களைச் செய்வதற்கான அறிவில்லாத அத்தகையோர், புலனின்பத்தால் மட்டுமே வழிநடத்தப்படுகின்றனர்;
இருப்பினும், பகவான் சைதன்யரால் தொடக்கி வைக்கப்பட்ட ஸங்கீர்த்தன. யாகம், கிருஷ்ண உணர்வின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முன்வரும் அனைவரும் பயிற்சி செய்யக்கூடிய, மிக எளிமையான யாகமாகும்.
Conclusion
இந்த மேற்கோள்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கூறுங்கள் மற்றும் என்ன மேற்கோள் வேண்டும் என்று அதையும் கூறுங்கள்.
titanium arts
TATONIC 출장샵 ART CUSTOMING · TATONIC ROCKING T-TATONIC jancasino카지노 ROCKING T-TATONIC ROCKING T-TATONIC. This unique http://www.ambienshoppie.com and original design titanium earrings is crafted with casinowed.com the use of sustainable