Bhagavad Gita chapter 4 verse 1 – கீதையில் பகுதி 4 கூறப்பட்டுள்ளதை இந்த பதிவில் எளிமையான தமிழில் புரியும் வகையில் பதிவிட்டுள்ளேன்.
Bhagavad Gita chapter 4 verse 1
புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரியதேவனான விவஸ்வானுக்கு உபதேசித்தேன். விவஸ்வான் மனித குலத் தந்தையான மனுவுக்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர்.
பொருளுரை
பகவத் கீதை. சூரிய கிரகத்திலிருந்து தொடங்கி, அனைத்து கிரகங்களின் மன்னர்களுக்கும், பன்நெடுங்காலத்திற்கு முன்பே உபதேசிக்கப்பட்டது என்ற சரித்திரத்தை இங்கு நாம் காண்கின்றோம்.
எல்லா கிரகங்களின் மன்னர்களும் குடிமக்களைக் காக்க வேண்டியவர்கள்; எனவே, மக்களை ஆள்வதற்காகவும் அவர்களை காமம் என்னும் பௌதிக பந்தத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும், குலத்தோர் அனைவரும் பகவத் அரச கீதையின் விஞ்ஞானத்தை அறிந்துகொள்வது அவசியம்.
முழுமுதற் கடவுளுடன் நித்திய உறவை வளர்க்கக்கூடிய ஆன்மீக ஞானத்தைப் பயில்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும். மேலும், எல்லா கிரகங்களிலும், எல்லா நாட்டிலும் உள்ள, அனைத்து தலைவர்களும் கல்வி. பண்பாடு, மற்றும் பக்தியின் மூலம் குடிமக்களுக்கு இந்த ஞானத்தைக் கற்றுத் தர கடமைப்பட்டுள்ளார்கள்.
வேறுவிதமாகக் கூறினால். எல்லா தேசத் தலைவர்களும் கிருஷ்ண உணர்வின் விஞ்ஞானத்தைப் பரப்புவதற்குக் கடமைப்பட்டுள்ளார்கள். அதன் மூலம். மனிதப் பிறவியின் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் மக்கள், இம்மாபெரும் விஞ்ஞானத்தினால் வெற்றிப் பாதையில் முன்னேறுவர்.
இந்த யுகத்தின் சூரியதேவனுக்கு. விவஸ்வான் (சூரியனின் மன்னன் என்று பெயர். சூரிய குடும்பத்திலுள்ள அனைத்து கிரகங்களுக்கும்
சூரியனே மூலமாகும். பிரம்ம சம்ஹிதையில் (5.52) கூறப்பட்டுள்ளது:
“முழுமுதற் கடவுளும் ஆதி புருஷருமான கோவிந்தரை நான் வணங்குகிறேன். எல்லாக் கிரகங்களுக்கும் தலைவனான சூரியன் அளவற்ற சக்தியையும், உஷ்ணத்தையும் இவருடைய கட்டளைக்கேற்பவே பெற்றுள்ளான். பகவானின் கண்ணை பிரதிநிதிக்கும் இந்த சூரியன், அவரது கட்டளைக்குப் படிந்து தனது பாதையில் சுற்றிக் கொண்டுள்ளான்.”
வெப்பமும், ஒளியும் தருவதன் மூலம் கிரகங்களைக் கட்டுப்படுத்தி அனைத்து கிரகங்களுக்கும் மன்னனாக விளங்கும் சூரியனை சூரியதேவன் (தற்போதைய சூரியதேவனின் பெயர் விவஸ்வான) ஆட்சி செய்துவருகிறான். கிருஷ்ணரது ஆணைப்படியே அவன் சுழன்று கொண்டுள்ளான்.
பகவத் கீதையின் விஞ்ஞானத்தைப் புரிந்துகொள்ளும் முதல் மாணவனாக பகவான் கிருஷ்ணர் விவஸ்வானை ஆக்கினார். எனவே, பகவத் கீதை அற்பமான ஏட்டுக் கல்வி அறிஞருக்கான கற்பனைக் காவியமல்ல. நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து கீழிறங்கி வரும் ஞானத்திற்கான தரமான புத்தகமாகும்.
“திரேதா யுகத்தின் ஆரம்பத்தில், பகவானுடனான உறவு பற்றிய இந்த விஞ்ஞானம் விவஸ்வானால் மனுவிற்கு வழங்கப்பட்டது. மனித குலத்தின் தந்தையான மனு.
தனது மகனும் பூலோகத்தின் மன்னனும், ஸ்ரீ இராமர் அவதரித்த ரகு வம்சத்தின் முன்னோடியுமான. மன்னன் இக்ஷ்வாகுவிற்கு இதனை அளித்தார். எனவே, மனித சமுதாயத்தில் இக்ஷ்வாகுவின் காலத்திலிருந்தே பகவத் கீதை இருந்து வந்துள்ளது.
4,32,000 வருடங்கள் நீடிக்கும் கலி யுகத்தில் நாம் தற்போது ஐயாயிரம் வருடங்களை மட்டுமே கடந்துள்ளோம். கலி யுகத்திற்கு முந்தைய யுகம் துவாபர யுகம் (8,00.000 வருடங்கள்). அதற்கு முந்தைய யுகம் திரேதா யுகம் (1.200,000 வருடங்கள்). இவ்விதமாக சுமார் 2.005,000 வருடங்களுக்கு முன்பே.
தனது சீடனும் மகனுமான பூலோக மன்னன் இக்ஷ்வாகுவிற்கு மனு இதனைக் கூறியுள்ளார். தற்போதைய மனுவின் ஆயுட்காலம் 305,300,000 வருடங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது, அதில் 120,400,000 வருடங்கள் கழிந்துள்ளன. மனுவின் பிறப்பிற்கு முன்பே பகவானால் அவரது சீடனும் சூரியதேவனுமான விவஸ்வானுக்கு கீதை கூறப்பட்டதை ஏற்றுக்கொள்ளும் நிலையில், ஏறத்தாழ 12,04,00,000 வருடங்களுக்கு முன் கீதை உபதேசிக்கப் பட்டதாக கணக்கிடலாம்.
மனித சமுதாயத்திலோ இஃது இருபது இலட்சம் வருடங்களுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஏறத்தாழ 5000 வருடங்களுக்கு முன் அர்ஜுனனிடம் பகவான் இதனை மீண்டும் உபதேசித்தார். கீதையின் கூற்றின்படியும். கீதையை உரைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றின்படியும்.
இதுவே கீதையின் சரித்திரம் பற்றிய தோராயமான கணக்கீடு. விவஸ்வான் சூரிய வம்ச சத்திரியர்களின் தந்தை என்பதால் பகவத் கீதை அவருக்கு வழங்கப்பட்டது.
முழுமுதற் கடவுளால் கூறப்பட்டதால், இந்த பகவத் கீதை வேதங்களுக்கு சமமான ஞானம், அபௌருஷேய, மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக ஞானம் எனப்படும். வேதக் கட்டளைகள் மனித வியாக்கியானமின்றி உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளப்படுவதைப் போல, கீதையும் பௌதிக வியாக்கியானங்களின்றி ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
வீண் வாதம் செய்யும் ஏட்டறிஞர்கள் தங்களது சுய வழியில் கீதையைப் பற்றி கற்பனை செய்யலாம். ஆனால் அஃது உண்மையான பகவத் கீதையாகாது. எனவே, கீதையை சீடப் பரம்பரையின் மூலம் உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பகவான் இதனை சூரியதேவனுக்கும், சூரியதேவன் தனது மகனான மனுவிற்கும், மனு தன் மகன் இக்ஷ்வாகுவிற்கும் இதனை உபதேசித்ததாக இங்கு விளக்கப்பட்டுள்ளது.
Roulette | Baccarat | Online Roulette in – Worrione
The roulette game of roulette is worrione called baccarat. The basic game of playing is to https://shootercasino.com/emperor-casino/ add a https://baccaratsites777.com/ certain number of numbers jancasino.com to your betting slip and kadangpintar win.