Bhagavad Gita Chapter 4 Verse 2, 3

 Bhagavad Gita Chapter 4 Verse 2

Bhagavad Gita Chapter 4 Verse 2, 3


உன்னதமான இவ்விஞ்ஞானம் சீடர்களின் சங்கிலித் தொடர் போலத் மூலமாகப் பெறப்பட்டு, அவ்வாறே புனிதமான மன்னர்களால் உணரப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அத்தொடர் விட்டுப் போகவே, இவ்விஞ்ஞானம் மறைந்துவிட்டதை தோன்றுகின்றது.


பொருளுரை

பகவத் கீதை குறிப்பாக புனிதமான மன்னர்களுக்காக என்பது இங்கு தெளிவாகக் கூறப்படுகிறது: ஏனெனில், மக்களை ஆட்சி செய்வதற்கு கீதையின் நோக்கத்தை அவர்கள் நடைமுறைப்படுத்துவது அவசியம்.


 எவருக்கும் உபயோகமற்ற வகையில் பகவத் கீதையின் மதிப்பைக் குறைத்து, தனது மனம்போன போக்கில் பலவித விளக்கவுரைகளை உற்பத்தி செய்யும் அசுரர்களுக்கானது அல்ல பகவத் கீதை என்பது நிச்சயமே, உள் நோக்கத்தினால், உண்மை நோக்கம் சிதைவுற்ற காரணத்தால், சீடத்தொடரை மீண்டும் நிலைநிறுத்த வேண்டிய அவசியம் நோக்கம் மறைந்துவிட்டதைப் போலத் தோன்றுகின்றது" என்று அறிவித்தார்.


 அதுபோலவே, தற்காலத்திலும் கீதைக்கு பல்வேறு விளக்கவுரைகள் (முக்கியமாக ஆங்கிலத்தில்) இருப்பினும், பெரும்பாலும் அவற்றில் எதுவுமே அங்கீகரிக்கப்பட்ட சீடத்தொடரைச் சார்ந்தவை அல்ல. பற்பல ஏட்டறிஞர்கள் எண்ணற்ற விளக்கவுரைகளை வழங்கியுள்ளனர்;


 ஆனால், அவை ஸ்ரீ கிருஷ்ணரின் வார்த்தைகளைக் கொண்டுச் செய்யப்படும் நல்ல வியாபாரமாக இருப்பினும், பெரும்பாலும் கிருஷ்ணரை பரம புருஷ பகவானாக ஏற்பதில்லை.


 இந்த உணர்வு அசுரத்தனமானதாகும்; ஏனெனில், அசுரர்களே கடவுளின் சொத்தை அனுபவிக்கும் அதே நேரத்தில், அவரை நம்பாதவர்களாகவும் இருக்கின்றனர். சீடப் பரம்பரையின் மூலம் பெறப்பட்டதை உள்ளது உள்ளபடி வழங்கக் கூடிய கீதையின் ஆங்கிலப் பதிப்பிற்கு (இத்தமிழ் நூலின் மூல நூல்) மிகுந்த அவசியம் இருப்பதால், அந்த பெரும் தேவையை பூர்த்தி செய்ய இங்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது.


பகவத் கீதை 'உள்ளது உள்ளபடி ஏற்கப்பட்டால் மனித குலத்திற்கு அது மாபெரும் வரப்பிரசாதமாகும்; ஆனால், அதனை தத்துவ அனுமானத்தின் காவியமாக ஏற்பது, வெறும் கால விரயமே.


Bhagavad Gita chapter 4 Verse 3

பரமனுடன் உறவு கொள்வதைப் பற்றிய அதே பழம்பெரும் விஞ்ஞானத்தை நான் இன்று உனக்கு எடுத்துரைத்துள்ளேன்; ஏனெனில், நீ எனது பக்தனும் நண்பனுமாதலால் இந்த விஞ்ஞானத்தின் உத்தம இரகசியத்தை உன்னால் புரிந்துகொள்ள முடியும்.


பொருளுரை

பக்தன், அசுரன் என இரு வகையான மனிதர்கள் உள்ளனர். தனது பக்தன் என்ற காரணத்தால் இம்மாபெரும் விஞ்ஞானத்தைப் பெறுவதற்கு, அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்தார் பசுவான்.


 ஆனால் இந்த மாபெரும் விஞ்ஞான இரகசியத்தை அசுரர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஞானத்தின் சிறந்த புத்தகமான இந்த பகவத் கீதையை பலர் வெளியிட்டுள்ளனர்; அவற்றில் சில பக்தர்களால் உரை எழுதப்பட்டவை, மற்றவை அசுரர்களால் உரை எழுதப்பட்டவை.


 பக்தர்களால் எழுதப்பட்ட உரைகள் உண்மையானவை, அசுரர்களால் எழுதப்பட்டவையோ சற்றும் உபயோகமற்றவை. அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணரை பரம புருஷ பசுவானாக ஏற்றுக்கொள்கிறான். அர்ஜுனனின் அடிச்சுவட்டைப் பின்பற்றி எழுதப்படும் எந்த உரையும் இப்பெரும் விஞ்ஞான நூலுக்குச் செய்யப்படும் உண்மையான பக்தித் தொண்டாகும்.


ஆனால் அசுரர்களோ பகவான் கிருஷ்ணரை உள்ளபடி ஏற்பதில்லை. மாறாக, அவர்கள் கிருஷ்ணரைப் பற்றி கற்பனைகளைப் புனைந்து, கீதையைப் படிக்கும் பொதுமக்களை கிருஷ்ணரது உபதேசத்திலிருந்து வழி தவறி அழைத்துச் செல்கின்றனர்.


அத்தகைய தவறான பாதைகளைப் பற்றிய எச்சரிக்கை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அர்ஜுனனிடமிருந்து வரும் சீடத் தொடரைப் பின்பற்ற முயல வேண்டும். இவ்வாறு ஸ்ரீமத் பகவத் கீதை என்னும் இந்த மாபெரும் விஞ்ஞானத்தால் பயனடையலாம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.