Bhagavad Gita Chapter 4 Verse 4
அர்ஜுனன் வினவினான்: சூரியதேவனான விவஸ்வான் பிறப்பால் தங்களைவிடப் பெரியவர். தாங்கள் அவருக்கு இவ்விஞ்ஞானத்தை ஆரம்பத்திலேயே உபதேசித்தீர்கள் என்பதை எவ்வாறு நான் புரிந்துகொள்வது?
Chapter 4 verse 4 meaning – பொருளுரை
பகவானின் பக்தனாகிய அர்ஜுனன், கிருஷ்ணரது மொழிகளை நம்ப முடியாமல் இருப்பது சாத்தியமா? உண்மை என்னவெனில், அர்ஜுனன் தனக்காக இந்த வினாவை எழுப்பவில்லை.
பரம புருஷ பகவானின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்காகவும், கிருஷ்ணர் பரம புருஷ பகவானாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை விரும்பாத அசுரர்களுக்காகவும் இவ்வினாவை எழுப்புகிறான். முழுமுதற் கடவுளான கிருஷ்ணரைப் பற்றி அறியாததுபோல வினவிய அர்ஜுனன்.
கிருஷ்ணரே பரம புருஷ பகவான். அவரே அனைத்திற்கும் மூலம், அவரே உன்னதத்தின் இறுதி நிலை என்பதைப் பக்குவமாக அறிந்திருந்தான் என்பது பத்தாம் அத்தியாயத்தில் தெளிவாக விளங்கும். அதே சமயத்தில் இப்பூவுலகில் தேவகியின் மைந்தனாக கிருஷ்ணர் தோன்றியதும் உண்மையே. அவ்வாறு தோன்றியபோதும்.
அவர் எவ்வாறு அதே நித்திய மூல புருஷராகவும் பரம புருஷ பகவானாகவுமே திகழ்ந்தார் என்பதை சாதாரண மனிதனால் புரிந்துகொள்ள முடியாது. எனவே. இவ்விஷயத்தை அதிகாரபூர்வமாக பகவானே கூறிவிடட்டும் என்பதற்காக அவரிடமே வினவினான் அர்ஜுனன்.
இப்போது மட்டுமல்ல நினைவுக்கெட்டாத காலந்தொட்டே கிருஷ்ணரே பரம அதிகாரி என்பது அகிலம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம், அசுரர்கள் மட்டுமே அவரை நிராகரிப்பர்.
இருப்பினும், கிருஷ்ணரே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதிகாரி என்பதால் அர்ஜுனன் இவ்வினாவை அவரிடமே முன்வைக்கிறான் இதன் மூலம், கிருஷ்ணரே தன்னைப் பற்றி விளக்குவார்;
இல்லையேல், எப்போதும் கிருஷ்ணரை இழிவுபடுத்த முயலும் அசுரர்களுக்கும் அசுர நண்பர்களுக்கும் தகுந்தாற் போல. சில அசுரர்கள் கிருஷ்ணரைப் பற்றி தவறானத் தகவல்களைக் கொடுத்துவிடுவர்.
ஒவ்வொருவரும் தத்தம் சுய நன்மையைக் கருதியாவது கிருஷ்ண விஞ்ஞானத்தை அறிந்துகொள்வது இன்றியமையாததாகும். எனவே, கிருஷ்ணரே அவரைப் பற்றிக் கூறுவது அனைத்து உலகங்களுக்கும் நன்மை பயப்பதாகும்.
கிருஷ்ணர் தன்னைப் பற்றிக் கூறக்கூடிய விளக்கங்கள். அசுரர்களுக்கு வினோதமாகத் தெரியலாம்: ஏனெனில், அவர்கள் கிருஷ்ணரைத் தங்களது கண்ணோட்டத்திலேயே எப்போதும் எடைபோடுகின்றனர்-ஆனால் பக்தர்களோ கிருஷ்ணர் தன்னைப் பற்றிக் கூறும் விஷயங்களை இதயபூர்வமாக வரவேற்கின்றனர். அவரைப் பற்றி மேன்மேலும் அறிவதில் எப்போதும் அளவில்லா ஆர்வம் கொண்டிருப்பதால், அவர்கள் கிருஷ்ணரின் இத்தகு அதிகாரபூர்வமான சொற்களை வழிபடுகின்றனர்.
கிருஷ்ணரை சாதாரண மனிதனாக எண்ணும் நாத்திகர்கள்-கிருஷ்ணர் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர். ஆனந்தமும், அறிவும் நிறைந்த நித்திய ரூபமுடையவர் (ஸச்-சித், ஆனந்த,-விக்,ரஹ திவ்யமானவர்.
ஜட இயற்கை குணங்களின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டவர், காலம் இடம் ஆகியவற்றின் பாதிப்புகளைக் கடந்தவர்-முதலியவற்றை கீதையின் மூலம் அறிந்துகொள்ளலாம். அர்ஜுனனைப் போன்ற கிருஷ்ண பக்தர் கிருஷ்ணரின் திவ்யமான நிலையைப் பற்றிய குழப்பங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதில் ஐயமில்லை.
கிருஷ்ணரை ஜட இயற்கையின் குணங்களுக்கு உட்பட்ட சாதாரண மனிதனாகக் கருதும் நாத்திகர்களின் மனப்பான்மையை முறியடிப்பதற்காகச் செய்யப்பட்ட முயற்சியே, பக்தனான அர்ஜுனனால் பகவானின் முன்பு எழுப்பப்பட்ட இவ்வினாவாகும். முறியடிப்பதற்காகச் செய்யப்பட்ட முயற்சியே, பக்தனான அர்ஜுனனால் பகவானின் முன்பு எழுப்பப்பட்ட இவ்வினாவாகும்.
Conclusion
இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் பகிருங்கள் மற்றும் பகவத்கீதையில் பகுதிகளில் உள்ள சில ஸ்லோகங்களை உங்களுக்காக பதிவிட்டுள்ளேன் அதையும் படித்து பாருங்கள்.