பல பேர் தன்னம்பிக்கை இல்லாமல் அவர்களின் வாழ்க்கையில் மன வருத்தத்தோடு இருப்பார்கள் அதற்காக இந்தப் பதிவில் மிக அருமையான தன்னம்பிக்கையூட்டும் ஒரு கதையை நான் பதிவிட்டுள்ளேன்.
மற்றும் இந்த கதையை முழுமையாக படித்து உங்கள் குழந்தைகளுக்கும் இந்த கதையை சொல்லுங்கள் அவர்கள் வளரும்போதே தன்னம்பிக்கையுடன் வளர்வார்கள்.
தன்னம்பிக்கையூட்டும் கதை | Motivational story in tamil
கரைசல் என்ற அழகிய சின்ன கிராமத்தில் ஒரு பானை செய்பவர் வாழ்ந்து வந்தார். இந்தக் கரைசல் கிராமத்து மக்கள் அனைவரும் பக்கத்து கிராமத்தில் உள்ள ஒரு ஆண்டில்தான் நீரினை கொண்டு வருவார்கள்.
வாணி செய்பவர் பக்கத்து கிராமத்திற்கு சென்று நீரினை எடுப்பதற்கு தனக்காக இரண்டு பானைகளை செய்தார். அந்த இரண்டு பானைகளை இரு கயிற்றால் கட்டி அந்த இரு கயிற்றுகளையும் ஒரு கொம்பில் கட்டி தனது தோல் மீது வைத்து தண்ணீர் எடுக்க செல்வார்.
இதேபோல் இரண்டு பானைகளையும் தண்ணீர் எடுக்க பயன்படுத்தி வந்தால் ஒருநாள் அந்த இரண்டு பானைகளில் ஒரு பானையில் விரிசல் ஏற்பட்டது. இதனை அவர் கவனிக்காமல் தண்ணீர் வீட்டிற்கு எடுத்து வந்தார் ஆனால் அந்த விரிசல் விழுந்த ஒரு பானையில் பாதி தண்ணீர்தான் இருந்தது.
இதனைக் கண்ட பணி செய்பவர் மறுபடியும் நாளை இதே பானையை தண்ணீர் எடுக்க எடுத்துச் சென்றார்.
இந்த இரண்டு பானைகளும் பேசிக் கொண்டது அதில் நன்றாக இருக்கும் பானை நீதான் பாதி தண்ணீர்தான் வீட்டிற்கு கொண்டு வருகிறாய் ஏன் உன்னை இவர் இன்னும் பயன்படுத்துகிறார் என்று நன்றாக இருக்கும் பானை விரிசல் பானையை பார்த்து கேட்டது.
அதற்கு அந்த விரிசல் அடைந்த பானை எனக்கும்தான் இவர் ஏன் இப்படி செய்கிறாய் என்று தெரியவில்லை என்று கூறியது.
சரி நாளை பார்ப்போம் இவர் மறந்து என்னை எடுத்துச் சென்று இருப்பார் என்று நினைக்கிறேன் நாளை இதேபோல் என்னை எடுத்துச் சென்றால் ஏன் என்று அவரிடமே கேட்போம் என்று கூறியது.
பொழுது விடிந்தது, பானை செய்பவர் பக்கத்து கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுக்க நேற்று கொண்டு போயிருந்த அதே விரிசல் உடைந்த பானையையும் மற்றும் இன்னொரு பாடலையும் எடுத்து சென்றார்.
அந்த இரண்டு பானைகளிலும் தண்ணீரை நிரப்பி எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றிருக்கும் போது அந்த விரிசல் அடைந்து நான்தான் விரிசல் அடைந்து விட்டேன் என்னால் பாதி தண்ணீர்தான் வீட்டிற்குக் கொண்டுவர முடிகிறது ஏன் என்னை இன்னும் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டது.
அதற்கு பானை செய்பவர் நாம் தண்ணீர் எடுத்து வரும் வழிகளில் இருக்கும் செடிகளை நீ பார்த்தாயா என்று கேட்டார்.
அதற்கு விரிசல் அடைந்த போனேன் நான் பார்த்தேன் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டது.
பானை செய்பவர், அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்கிறது. உன் விரிசல்களில் இருந்து வடியும் தண்ணீரால் தான் அது நன்றாக வளர்ந்திருக்கிறது. உன்னால் தான் இந்தச் செடிகள் எல்லாம் நன்றாக வளர்ந்திருக்கிறது என்று கூறினார்.
இதனை கேட்ட பானை மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. இந்த பானை தொழில் செய்பவர் இந்த பானையின் குறையையும் செடிகளுக்கு பயனுள்ளதாக தான் மாற்றியுள்ளார் என்பதை புரிந்து கொண்டது இரண்டு பானைகளும்.
Theme of the motivation story | மையக்கருத்து
இதேபோல் நீங்களும் உங்களிடம் உள்ள குறைகளை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றங்கள் உங்களிடம் உள்ள குறைகளை எண்ணி வருந்தாதீர்கள். எனவே குறைகளை பயனுள்ளதாக மாற்றும் முயற்சியை இன்றிலிருந்தே தொடங்குங்கள்.
எனவே, குறைகளைக் கண்டு வருந்துபவன் மனிதனல்ல அதனை நிறைவாக மாற்றுப் அவனே மனிதன் என்று கூறி இந்த நல்ல கதையை வழங்கிவிட்டு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.
எனவே தன்னம்பிக்கை இழந்து தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மற்றும் உறவினர்களுக்கும் இந்த பதிவை பகிர்ந்து விடுங்கள்.