vivek-road

மறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வியின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றியது

மறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி, மகள் அமிர்தானந்தினி ஆகியோர் சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் விவேக் நினைவாக அவர் வாழ்ந்த தெருவுக்கு பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,000 குடும்பங்களுக்கு ரம்ஜான் பரிசு வழங்கும் நிகழ்ச்சி விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா தலைமையில் ஆழ்வார்திருநகரில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், நடிகர் விவேக் வசித்த பகுதிக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் உடனடியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

விவேக் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இறுதி மூச்சு விடும்போது அவருக்கு வயது 59. அவரது அகால மறைவு தமிழ்த் திரையுலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. கடந்த மாதம் (ஏப்ரல் 17) நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அவரது குடும்பத்தினர் அனுசரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.